பக்கம்:தமிழ்மொழி இலக்கிய வரலாறு.pdf/272

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

270

தமிழ் மொழி-இலக்கிய வரலாறு


விறலியர் நடனமாடினர். மக்கள் இறைவனை வழிபட்டனர் {17,9–21] .

வையை; வையையில் புதுவெள்ளம் வருவதைக் கண்டதும் ஆற்றங்கரையின் காவலர் கரையைக் காவல் காத்தனர் (10, 7) . மதுரை மக்கள் அனைவரும் புது வெள்ளத்தில் நீராடினர். தலைவர் சிலர் பரத்தையருடன் நீராடினர். நீராடியவர்கள் பொன்னால் செய்யப்பட்ட நத்தை, நண்டு, இறால், வாளை மீன் இவற்றை நீரில் விட்டனர் |10, 71-88) வையையின் கரையிலிருந்த சோலைகளில் ஆடல் பாடல் நிகழ்ந்தன (22, 35-45). மதுரை மக்கள் வையையைப் பலவாறு வாழ்த்தித் தத்தம் இல்லங்களை அடைந்தனர்.

தமிழ் வையை : பாண்டியர் தமிழ்ச் சங்கத்தை நிறுவியவர்; புலவர்களை ஆதரித்துத் தமிழை வளர்த்தவர். அதனால் அவர்கள் தலைநகராகிய கூடல் தமிழ் கெழு கூடல்' எனப்பட்டது அக்கூடலை அடுத்துப் பாய்ந்த வையையும், தமிழ் வையை (6, 60) எனப்பட்டது.

தைந் நீராடல்.: மார்கழி மாதத்தில்-நிறைமதி நாளாகிய திரு ஆதிரையில் ஆகமங்களை உணர்ந்த பூசகர்கள் தெய்வத்திற்குத் திருவிழாவைத் தொடங்கினர். அப்போது கன்னிப் பெண்கள் ஒன்றுகூடி நிலம் மழைவளம் பெற்றுக் குளிர்வதாகுக, என்று சொல்லி அம்பாஆடலை மேற்கொண்டனர். அந்நோன்பு முறையை அறிந்த முதிய பார்ப்பனிமார் அக்கன்னிப் பெண்களுக்கு நோன்பு நோற்கும் முறைமையைத் தெரிவித்தனர். அக்கன்னிப் பெண்கள், அவர்கள் தெரிவித்தபடி, பனி நிறைந்த கதிரவன் தோன்றும் காலத்தில் வையையில் நீராடினர்; கரையில் தங்கியிருந்த அந்தணர் வளர்த்த வேள்வித்தீயை வணங்கினர். இங்ஙனம் இளைய ஆண்மக்களோடு காமக் குறிப்பு இல்லாத விளை யாட்டைப் புரியும் அக்கன்னிப் பெண்கள். தவமாகிய தைந்நீராடலை வாய்க்கப் பெற்றனர் 11, வரி 74-92). இது