பக்கம்:தமிழ்மொழி இலக்கிய வரலாறு.pdf/277

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.



16. பதிற்றுப்பத்து

முன்னுரை

ஒவ்வொரு சேரவேந்தனைப் பற்றிப் பத்துப்பத்துப் பாக்களாகச் சேரவேந்தர் பதின்மரைப் பற்றிய நூறு பாடல்களைக் கொண்டமையால், இந்த நூல் பதிற்றுப் பத்து என்னும் பெயர் பெற்றது. இன்றுள்ள நூலில் முதல் பத்தும் இறுதிப் பத்தும் இல்லை.

பாடல் பெற்ற சேரர் : இரண்டாம் பத்து உதியஞ்சேரலின் மகனான இமயவரம்பன் நெடுஞ்சேரலாதனைப் பற்றியது, மூன்றாம் பத்து நெடுஞ்சேரலாதன் தம்பியான பல்யானைச் செல்குழு குட்டுவனைப் பற்றியது; நான்காம் பத்து நெடுஞ்சேரலாதன் மகனான களங்காய்க்கண்ணி நார் முடிச் சேரலைப் பற்றியது; ஐந்தாம் பத்து நெடுஞ்சேரலாதன் மகனான செங்குட்டுவனைப் பற்றியது. ஆறாம் பத்து நெடுஞ்சேரலாதன் மகனான ஆடுகோட்பாட்டுச் சேரலாதனைப் பற்றியது. ஏழாம் பத்து அந்துவஞ்சேரல் இரும்பொறையின் மகனான செல்வக் கடுங்கோ வாழியாதனைப் பற்றியது. எட்டாம் பத்து அவ்வாழியாதன் மகனான தகடூர் எறிந்த பெருஞ்சேரல் இரும்பொறையைப் பற்றியது. ஒன்பதாம் பத்து, பெருஞ்சேரல் இரும்பொறை யின் மகனான இளஞ்சேரல் இரும்பொறையைப் பற்றியது. எனவே, இவ்வெட்டுப் பத்துகளும் இரண்டு குடும்பத் தினரைப் பற்றியவை என்பது தெளிவு.

சேரர் கொடை : இரண்டாம்பத்தைப் பாடியவர் குமட்டூர்க் கண்ணனார் என்பவர். சேரமான் அவருக்கு உம்பற் காட்டைச் சேர்ந்த ஐந்நூறு ஊர்களைப் பிரமதாயமாகக் கொடுத்தான். தன் ஆட்சிக்கு உட்பட்ட நாட்டின் தென்-