பக்கம்:தமிழ்மொழி இலக்கிய வரலாறு.pdf/291

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது



17. புறநானூறு

முன்னுரை

எட்டுத்தொகை நூல்களுள் புறநானூறு வரலாற்றுச் சிறப்புடையது, அறம், பொருள், வீடு ஆகிய மூன்றையும் பற்றிய பாடல்களைக் கொண்டது; 157 புலவர்கள் பாடிய பாடல்களைத் தன்னகத்தே கொண்டது. இதனைச் சிறந்த முறையில் முதலிற் பதிப்பித்த பெரியார் டாக்டர் உ. வே. சாமிநாதையர் ஆவர்.

புறநானூறு வரலாற்றுக்குப் பெருந்துணை செய்யும் நூல். அஃது இறுதியில் தொகுக்கப்பட்டது என்று கூறலாம். நானூறு பாக்களுள் இரண்டு பாக்கள் (287, 268) காணப்படவில்லை. பதினான்கு பாடல்களைப் பாடியவர் இன்ன வர் என்பது தெரியவில்லை. பாடிய புலவர்களின் எண்ணிைக்கை 157; பாடியவரும் பாடப்பட்டவருமாகிய பேரரசர். சிற்றரசர் முதலியோர் தொகை 178.

இந்நூலில் உள்ள செய்யுட்களைப் பாடிய புலவர்கள் ஒரு நாட்டாரல்லர், ஒர் ஊராரல்லர் தமிழகம் முழுமையிலும் வாழ்ந்தவராவர். இவருள் சேரர், சோழர், பாண்டியர், குறுநில மன்னர், அந்தணர், வேளாளர், பலவகை வணிகர், வீரர், அரசமாதேவியர், குறுநில் மன்னர் மகளிர், கொல்லர் முதலிய பலவகைத் தொழிலாளர் எனப் பலவகைப் பட்டவர் இடம் பெற்றுள்ளனர். -

சேர, சோழ, பாண்டிய நாடுகள், அவற்றின் தலை நகரங்கள், ஆறுகள், மலைகள், தமிழகத்தில் பேரரசர்சிற்றரசர் செய்த போர்கள், மன்னரது ஒழுக்கம், வீரர்

த-19