பக்கம்:தமிழ்மொழி இலக்கிய வரலாறு.pdf/305

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

டாக்டர்.மு.இராசமாணிக்கனார்

303


உணர்த்துகிறது. சோழருள் பெருநற்கிள்ளி என்பவன் இராஜ சூயயாகம் செய்து, இராயசூயம் வேட்ட பெருநற்கிள்ளி'என்று பெயர் பெற்றான். பாண்டியருள் ஒருவன் பல யாகசாலைகளை அமைத்துப் 'பல்யாகசாலைமுதுகுடுமி பெருவழுதி' எனப் பெயர்பெற்றான். அவன் வேள்விஅந்தணர்க்கு ஊர்களை உதவினவன் என்று வேள்விக்குடிச்செப்பேடுகள் செப்புகின்றன. பூஞ்சாற்றூர்ப் பார்ப்பான் கவுன்னியன் விண்ணந்தாயன் பல வேள்விகள் செய்த பெருமகன் இவை அனைத்தும் சங்ககாலப் பிற்பகுதியில் (கி. பி. முதல் மூன்று நூற்றாண்டுகளில்) தமிழகத்துச் சமயத் துறையில் (பெருமக்கள் அளவில்) வடமொழியாளர் செல்வாக்கு வேரூன்றி வளர்ந்துவந்தது என்பதை அங்கைக்கனியெனஅறிவிக்கின்றன. இவர்கள் சேர்க்கையால் வடமொழிச் சொற்கள் பல தமிழ் இலக்கியத்தில் இடம் பெற்றமை ஒவ்வொரு நூலைப்பற்றிய ஆராய்ச்சியிலும் கூறப்பெற்ற தன்றோ?

வட சொற்கள்: புறநானூற்றில் இடம் பெற்றுள்ள வட சொற்களுள் பின்வருபவை குறிப்பிடத்தக்கவை:

அசுரர், அஞ்சனம் (174), அந்தி (2) , அமிழ்தம் (182), ஆகுதி (99) , இயக்கன் (71) , ஈமம் (281), உற்கம் (41) . கபிலம் (337) , கரகம் (1) . கலாபம் (183), குமரி (67), கெளரியர் (3), சடை (251), சாபம் (70), சாமரம் (50), சிகரம் (185), சித்திரம் (251), தருப்பை (360), நேமி (3) , பிண்டம் (284) , பூதம் (369), மதுரை (351), மாயம் (363), மார்ச்சனை (1.64) , முண்டகம் (24) , யூபம். (400).