பக்கம்:தமிழ்மொழி இலக்கிய வரலாறு.pdf/311

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

309

யில் பாடப்பெற்ற சிறுபாணாற்றுப்படை கி. பி.3 ஆம் நூற்றாண்டின் பிற்பாதியில் செய்யப்பட்டதாகலாம் என்றும் கொள்வது பொருத்தமாகும். வேறு தக்க சான்றுகள் கிடைக்கும் வரையில் இம்முடிபைக் கொள்ளல் தகும்.

   பத்துப்பாட்டுள் எஞ்சியிருப்பது திருமுருகாற்றுப்படை ஒன்றேயாம். இனி இதனைப்பற்றி ஆராய்வோம். திருமுருகாற்றுப்படையின் காலம்
  வள்ளல்பால் பரிசு பெற்று மீளும் பாணர், கூத்தர். புலவர் முதலியோர் வறுமையால் வாடும் பாணர் முதலிய இரவலரை ஆற்றுப்படுத்தல் 'ஆற்றுப்படை' என்று தொல்காப்பியர் கூறியுள்ளார்.7 பாணனை ஆற்றுப்படுத்தல் "பாணாற்றுப்படை' எனவும், புலவரை ஆற்றுப்படுத்தல் 'புலவர் ஆற்றுப்படை' எனவும், கூத்தரை ஆற்றுப்படுத்தல் 'கூத்தர் ஆற்றுப்படை' எனவும் பெயர் பெறும்,
  திருமுருகாற்றுப்படை பக்தி நூல். முருகன் அருளைப் பெற்ற ஒருவன் பக்தி மிகுந்த மற்றோர் அடியவனை அம்முருகன்பால் ஆற்றுப்படுத்தல் முருகாற்றுப்படையின் பொருளாகும். இது தொல்காப்பிய இலக்கண விதிக்கு மாறுபட்டது. அஃதாவது, சமயத் துறையில் ஆற்றுப்படுத்தி நூல் செய்தல் தொல்காப்பியர் காலத்தில் இல்லை என்பது அவரது நூற்பாவால் தெரிகிறது. ஆதலின் என்க.
  (1) சிவபெருமானது வீரியத்தை இந்திரன் பெற்றான். முனிவர் அறுவர் அதனை இந்திரனிடமிருந்து பெற்று வேள்வித் தீயில் இட்டு அதன் வேகத்தைக் குறைத்துத் தம் மனைவியர் அறுவருக்கு உண்ணக் கொடுத்தனர். அதனை உண்ட முனிவர் பத்தினிமார் ஆறு குழந்தைகளைப் பெற்றனர். அக் குழந்தைகளே ஆறு முகங்களும் பன்னிரண்டு கைகளும் உடைய ஒரே குழந்தையாக மாறின என்று ஐந்தாம் பரிபாடல் கூறுகிறது. ஆயின்,

7. புறத்திணை இயல், நூற்பா 36, எச்ச இயல் 60.