பக்கம்:தமிழ்மொழி இலக்கிய வரலாறு.pdf/325

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

டாக்டர் மா.இராசமாணிக்கனார்

323


வாணிகம் : உள்நாட்டு வாணிகத்தில் கழுதைகளும் பெரும்பங்கு கொண்டன. அவை மிளகு முதலியசரக்குகளைக் கொண்ட பண்டப் பொதிகளைச் சுமந்து வரிசையாகச் சென்றன. உப்பு ஏற்றப்பட்ட வண்டிகளை எருதுகள் இழுத்துச் சென்றன (பெ. ஆ. படை, 78-80). தமிழகத்தில் மலை நாட்டிலிருந்து சந்தனம், அகில், மிளகு முதலிய பொருள்கள் தரைவழியே வந்தன.

தொண்டை நாட்டுத் துறைமுக நகரங்களுக்கு அயல் நாடுகளிலிருந்து குதிரைகள் வந்தன (பெரும்பாண், வரி 320). முத்து, சங்கு, வளை, பலவகை உணவுப்பொருள்கள், தீம்புளி, வெள்ளுப்பு, மீன் உணக்கல், உயர்ந்த வேலைப் பாடமைந்த நகைகள் ஆகியவை மேல் நாடுகளுக்கு ஏற்றுமதி ஆயின (ம. கா. வரி 315-322). காவிரிப்பூம்பட்டினத்துத் துறைமுகப் பகுதியில் மேலைநாடுகளிலிருந்து வந்த குதிரைகளும், தென்கடல் முத்தும், கீழ்க்கடல் பவளமும், இலங்கை உணவுப் பொருள்களும், பர்மா நாட்டுப் பொருள்களும் இறக்குமதியாயின. அவற்றுடன் சேரநாட்டு மிளகு மூட்டைகளும், வடமலையில் கிடைத்த மணிகளும் பொன்னும் இடம் பெற்றிருந்தன.

இக்கடல் வாணிகம் ஒய்வின்றி நடைபெற்றது என்பதைப் பட்டினப்பாலை தெளிவாகத் தெரிவிக்கின்றது (வரி 120- 134). பல மொழிகள் பேசிய பல நாட்டு வணிகரும் பூம்புகார் நகரில் வாணிகத்தின் பொருட்டு வாழ்ந்துவந்தனர் என்று பட்டினப்பாலை (வரி 216.217) பகருகின்றது.

இக் கடல் வாணிகத்தில் பங்குகொண்ட பல்வேறு நாட்டவருள் யவனர் சிறப்பிடம் பெற்றிருந்தனர். “யவனர் கொண்டு வந்த பொருள்களுள் பாவை விளக்கு, அன்னப் பறவை விளக்கு என்பவை குறிப்பிடத்தக்கவை.15 யவனர் அரையாடையும் சட்டையும் அணிந்திருந்தனர். இவர்கள் அர


15. நெடுநல்வாடை, வரி 101-102; பெரும் பாணாற்றுப்படை, வரி 316-317.