பக்கம்:தமிழ்மொழி இலக்கிய வரலாறு.pdf/330

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது



328

தமிழ் மொழி-இலக்கிய வரலாறு

(167), பதினெண் கணங்கள் (168), நாற்பத்தெட்டு ஆண்டுகள் பிரமசரிய விரதம் காத்த அந்தணர் (179), முருகன் மலைமகள் (பார்வதி) மகன் (257), கொற்றவை சிறுவன் (வரி 258) என்னும் புராணச் செய்திகள் இடம் பெற்றுள்ளன.

சிறுபாணாற்றுப் படையில் அருச்சுனன் தமையன் வீமன் என்பதும் அவன் மடைத்தொழிலில் சிறந்தவன் என்பதும் அவனது நூற்படி நல்லியக்கோடன் அரண்மனையில் உணவு சமைக்கப்பட்டது (வரி 239.241) என்பதும் கூறப்பட்டுள்ளன. அதே பாட்டில் வேலூரின் பெயர்க் காரணம் கூறப்பட்டுள்ளது. நல்லியக்கோடன் தன் பகை மிகுதிக்கு அஞ்சி முருகனை வழிபட்டான். அப்பெருமான், “இக்கேணியில் உள்ள பூவை எடுத்துப் பகைவர்மீது எறி,’’ என்று கனவில் தோன்றிக் கூறினான். நல்லியக்கோடன் கேணியிலிருந்த பூவை எடுக்க அது வேலாக மாறிற்று. அன்று முதல் அக்கேணியிருந்த ஊர் வேலூர்' என்று பெயர் பெற்றது (172-173).

திருமாலின் கொப்பூழில் தோன்றிய தாமரையிலிருந்து பிரமன் தோன்றியமையும் (402-403), பாண்டவர் கவுரவர் போரும் (415-417) பெரும்பாணாற்றுப் படையில் கூறப்பட்டுள்ளன. முருகன் பகைவர்மீது செல்லலும் (183), திருமால் பிறந்த ஒணநாள் விழாவும் (591) மதுரைக் காஞ்சியில் இடம் பெற்றுள்ளன. உரோகிணி சந்திரனை விட்டுப் பிரியாதவள் என்பது நெடுநல்வாடையில் (163) கூறப்பட்டுள்ளது. சூரியன் ஏழு குதிரைகள் பூட்டிய தேரினன் என்பது குறிஞ்சிப்பாட்டில் (215.216) இடம் பெற்றுள்ளது.

"சிவன் அல்லது ருத்திரன் என்னும் கடவுள் மலைக்குரிய கடவுளாக வடவரால் கருதப்பட்டான். ஆயின், தமிழர் முருகனை மலைக்குரிய கடவுளாகக் கருதினர். வேதகாலத்தில் சுப்பிரமணிய வணக்கம் இல்லை. இந்திரன்