பக்கம்:தமிழ்மொழி இலக்கிய வரலாறு.pdf/331

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

டாக்டர் மா. இராசமாணிக்கனார்

329


பணியாளரான அக்கினியும் வாயுவும் சுப்பிரமணியர் என்ற ழைக்கப்பட்டனர் என்று தைத்ரீய ஆரணியகம் கூறுகிறது. அந்நூலில் அச்சுப்பிரமணியன் வழிபாட்டுக்குரிய சுலோகங்கள் இல்லை. ஆயின், இதிகாச காலத்தில் கார்த்திகேயன் அல்லது சுப்பிரமணியன் பிறப்புப்பற்றிய குறிப்புக்கள் கிடைக்கின்றன. அக்கடவுள் உருத்திரன் அல்லது அக்கினியின் மகனாகக் கூறப்பட்டுள்ளான். உருத்திர வணக்கம் அல்லது சிவ வணக்கத்தின் வளர்ச்சியின் பயனாகவே சுப்பிரமணிய வணக்கம் தோன்றியிருக்கலாம். தென்னாட்டவர் தங்கள் முருகனை இச்சுப்பிரமணியனாகக் கருதி வழிபடக் கருதினர் என்ளலாம்.[1]

வடசொற்கள்

திருமுருகாற்றுப்படை உள்ளிட்ட பத்துப்பாடல்களிலும், சில வடசொற்களே காணப்படுகின்றன, அவற்றுள் சிறப்பாகக் குறிக்கத் தக்கவை கீழ்வருவனவாகும்:

(1) மகரம், பிண்டி, அவுணர், மந்திரம், அங்குசம் (திருமுருகாற்றுப்படை).

(2) மாத்திரை, மது (பொருநர் ஆற்றுப்படை).

(3) ஆரம். இமயம், தெய்வம், நாகம், நித்திலம், கோபம், நேமி (சிறுபாணாற்றுப்படை).

(4) பூதம், விசயம், கின்னரம் (பெரும்பாணாற்றுப்படை)

(5) படம், மிலேச்சர், கடகம் (முல்லைப்பாட்டு).

(6) யூபம், சலம், நியமம், பதாகை, ஆதி, அரமியம், அந்தி, தூரியம், வேதம், சாவகர், ஆவுதி அமிர்து, மாயம், கணம், அவுணர், ஓணம்,


  1. சி. வி. நாராயண அய்யர், தென்னிந்தியாவில், சைவ சமயத் தோற்றமும் தொடக்க வரலாறும், பக். 192.