பக்கம்:தமிழ்மொழி இலக்கிய வரலாறு.pdf/339

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

டாக்டர்.மா.இராசமாணிக்கனார்

337


12. பார்ப்பனி கீரிப்பிள்ளையைக் கொன்ற கதை பஞ்சதந்திரத்தைச் சேர்ந்தது. அதனைக் கூறும் சிலப்பதிகாரம் மிகவும் பிற்பட்டதாகும். [1]

தடைக்குரிய விடைகள்

இனி, இத் தடைகள் பொருந்துவனவா என்பதை ஒவ்வொன்றாக எடுத்து இங்கு ஆராய்வோம்.

1. இளங்கோவடிகள் செங்குட்டுவனுக்கு இளவல் என்பதை, இளங்கோ துறவு பூண்ட வரலாற்றை எடுத்துக் கூறித் தெய்வம் விளக்கியதாக இளங்கோவடிகளே மிகத் தெளிவாக வரந்தரு காதையில் பன்னிரண்டு வரிகளில் (171-183) கூறியுள்ளார். இந்நிலையில் மணிமேகலையின் சான்றோ, பதிற்றுப்பத்தில் ஐந்தாம்பத்தின் சான்றோ இதற்குத் தேவையில்லையே! மணிமேகலையிலோ ஐந்தாம் பத்திலோ இந்த உறவு முறையைக் கூறத்தக்க வாய்ப்பும் இல்லையே!


2.செங்குட்டுவன் இயற்றிய பத்தினி விழாவை முதன் முதல் எடுத்துக் கூறிய இளங்கோவடிகள் அதற்கு வந்திருந்த மாளுவ வேந்தரையும் கயவாகுவையும் குறிப்பிட்டார். இம் மாதிரியே மணிமேகலையிலும் குறிக்கப்பட வேண்டுமென்று வற்புறுத்தல் உண்டா? அங்ஙனம் குறிக்கப்படாமையால் இஃது ஏற்றுக்கொள்ளத் தக்கதன்று என்று கூறுவது பொருத்தமாகுமா? இலங்கை வரலாற்று நூல்களுள் காலத்தால் முற்பட்ட மகாவம்சத்தில் கயவாகு பத்தினி விழாவிற்கு வந்திருந்தது குறிக்கப்படவில்லை என்பது உண்மையே. ஆயின், பின் நூற்றாண்டுகளில் எழுதப்பட்ட இராசவழியில் அச்செய்தி குறிக்கப்பட்டுள்ளது. கயவாகு வந்தமை சிலப்பதிகாரத்தில் தெளிவாகக் குறிக்கப்பட்டுள்ளது. அது .. கேட்டுக் கடல்சூழ் இலங்கைக் கயவாகு என்பான் நங்கைக்கு

.


  1. 5. History of Tamil Language and Literature, pp. 143-152.

த-22