பக்கம்:தமிழ்மொழி இலக்கிய வரலாறு.pdf/342

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

340

தமிழ் மொழி-இலக்கிய வரலாறு


அதனாற்றான் சாத்தனார் முன்னிலையில் சிலப்பதிகாரம் அரங்கேற்றப் பெற்றது; அடிகள் முன்னிலையில் மணிமேகலை அரங்கேற்றப் பெற்றது.

4. மதுரைக் கூலவாணிகன் சாத்தனார் நெடுஞ் செழியன் காலத்தவர் என்பது உண்மையே. அவர் பாடிய பாடல் எதுவும் தொகை நூல்களில் இல்லை. எனினும் அது கொண்டு அவர்காலத்தால் பிற்பட்டவர் என்பது எங்ங்னம் பொருந்தும்?

சாத்தனார் காலத்தவன் நெடுஞ்செழியன் என்ற பாண்டியன். அவன் பேராசிரியர் குறிப்பிட்டபடி அரசு கட்டிலில் துஞ்சிய பாண்டியன் நெடுஞ்செழியன் மட்டும் அல்லன், வடஆரியர் படை கடந்த நெடுஞ்செழியன் என்றும் பெயர் பெற்றவன்' என்று இளங்கோவடிகளே மதுரைக் காண்டத்தின் இறுதிக் கட்டுரையில் தெளிவாய்க் கூறியுள்ளார். இந்த ஆரியப்படை கடந்த நெடுஞ்செழியன் “உற்றுழி உதவியும்” என்று தொடங்கும் கல்வியின் மேம்பாடு பற்றிய செய்யுளொன்றைப் பாடியுள்ளான். அப்பாடல் புறநானூற்றில் (183) இடம் பெற்றுள்ளது. உண்மை இங்ங்னம் இருப்ப, இவன் கற்பனை அரசன் என்று பேராசிரியர் அவர்கள் எங்ங்னம் கூறத்துணிந்தார்களோ, தெரியவில்லை.

5. சிலப்பதிகாரத்தில் கூறப்படும் பத்தினி வணக்கம் வேறு தொகை நூல்களில் கூறப்படவில்லை என்பது உண்மையே. சங்கநூற் பாடல்கள் முழுமையும் நமக்குக் கிடைக்கவில்லை என்பது அனைவரும் அறிந்த உண்மையாகும். அழிந்துபட்ட பாடல்களுள் பத்தினி வணக்கம் பற்றிய பாடல்கள் இடம் பெற்றிருக்கலாம். இன்றுள்ள தொகை நூல்களில் பத்தினி வணக்கம் இல்லை என்பது கொண்டு சிலப்பதிகார காலம் பிற்பட்டது என்று கூறுதல் எங்ங்ணம் பொருந்தும்? சிலப்பதிகாரத்திற்குப் பின்பு செய்யப்பட்ட நூல்களிலும் இப்பத்தினி வணக்கம் குறிக்கப்பட