பக்கம்:தமிழ்மொழி இலக்கிய வரலாறு.pdf/348

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

346

தமிழ் மொழி-இலக்கிய வரலாறு


மிகத்தெளிவாகத் தெரியும் கயவாகு வேந்தன் காலத்தைக் காற்றில் பறக்கவிட்டுக் காலமே ஐயத்திற்கு இடமாகக் கூறத்தகும் பரிதாப நிலையிலுள்ள சான்றுகளைக் காட்டிச் சிலப்பதிகாரம் பிற்பட்டது எனக் கூறுதல் சிறிதும் பொருந்தாததாகும்.

தொகைநூற் பாடல்கள் சிலப்பதிகார காலத்தில் மட்டும் பாடப்பட்டவை அல்ல; அதற்கு முன்னும் பின்னும் பாடப்பட்டவை. அவை அகப் பொருள் புறப்பொருள் பற்றிய செய்திகளைக் கூற எழுந்த தனிப்பாக்களின் தொகுப்பாகும். சிலப்பதிகாரம் ஒரு பெரிய காவியம். அதனைப் பாடிய ஆசிரியரோ சமனத்துறவியார். சமணசமயம் வடநாட்டில் தோன்றியது. ஆதலால் சமண நூல்கள் வடமொழியில் எழுதப்பட்டன. எனவே, சமண சமயத் தொடர்பான செய்திகளும் அச்சமயத் தொடர்பான பெயர்களும் வடசொற்களில் அமைந்திருத்தல் இயற்கையேயாகும். இளங்கோ அடிகள் பரதநாட்டிய உண்மைகளை விவரமாகக் கூறுவதிலிருந்தும் அவரது வடமொழி அறிவை நாம் நன்கு அறியலாம்.

சேரநாடு மலைநாடு ஆதலால் தமிழ் நாட்டுடன் மிகுந்த தொடர்பு உடையதாக அமையவில்லை. அந்நாட்டில் வடமொழியின் செல்வாக்குச் சங்ககாலத்திலேயே மிகுந்திருந்தது. சேர மன்னர் வைதிக நெறியைப் பின்பற்றிப் பிற தமிழரசரை விட மிகுதியாக வேதவேள்விகள் செய்தனர்: வடமொழியாளரை நன்கு ஆதரித்தனர். சோழ பாண்டிய நாடுகளைவிடச் சேரநாடு வடமொழியை நன்கு ஆதரித்தது. நாம் இவற்றைப் பதிற்றுப்பத்தால் அறியலாம். இங்ங்னம் வைதிகநெறியிலும் சமணத்திலும் வடமொழி தனியரசு செலுத்தியமையால், சேரநாட்டு இளங்கோவடிகள் அச் சமயங்களைப் பற்றிக் கூறிய இடங்களிலெல்லாம் வடசொற்களைப் பெய்து வைத்தார் என்பது பொருந்தும்.

சிலப்பதிகாரம் குடிமக்கள் காப்பியம் ஆதலால்