பக்கம்:தமிழ்மொழி இலக்கிய வரலாறு.pdf/35

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

டாக்டர் மா. இராசமாணிக்கனார்

33


என்று கூறுதலே ஏற்புடையது எனக் கால்டுவெல் கூறுதல் கவனிக்கத்தக்கது.[1] தமிழுக்கே உரிய பால்பகா அஃறிணைப்பெயர் இம்மொழியில் காணப்படலும், இப்பிராஹுய் பேசுவோர் தென்னிந்தியத் தமிழ் மக்களை எல்லாக் கூறுகளிலும் ஒத்துள்ளமையும் அவர்கள் தமிழரே எனக்கூறத் துணிவு தருகிறது. 1911 இல் எடுக்கப்பட்ட மக்கட் கணக்கிலும் பிராஹுய் மொழியைத் திராவிட மொழிகளிலேயே சேர்க்கப்பட்டதும் கவனிக்கத்தக்கது. “பிராஹுய் திராவிட மொழி எனக் கூறக்கூடவில்லை; ஆயினும், அது திராவிட மொழியின் உயிர் நாடியைப் பெற்றுள்ளது என்பதில் ஐயமில்லை.” எனவே, பலுசிஸ்தானத்துக்கு அருகில் மிகப் பழைய திராவிட நாகரிகம் இருந்திருத்தல் வேண்டும் என்பது தெரிகிறது.[2]

“‘யான்’, ‘நான்’ என்பன தமிழ், மலையாளம், கூ, கோந்த் மொழிகளில் இருத்தல்-மிகப்பழைய மொழிகள் எனப்படுவனவற்றின் காலஎல்லையையும் கடந்து செல்கிறது. இன்றுள்ள நூல்கள் ஏறத்தாழ ஆயிரம் ஆண்டுகள் பழைமையுடையவை. இக்காலத்தைப்போல மூன்று மடங்கு காலம்-அதாவது, மூவாயிரம் ஆண்டுகட்கு முன்பு பண்டைத் தமிழரும் கோந்த் மக்களும் வட இந்தியாவில் ஒன்றுபட்டிருந்து ஒரே மொழியைப் பேசிவந்த காலத்திற்கு ‘நான்-யான்’ என்பன நம்மை அழைத்துச் செல்கின்றன.” இது கால்டுவெல் கூற்று.[3]

இப்போதுள்ள தமிழ் நூல்களில் பழைமையானது தொல்காப்பியம். கால்டுவெல் காலத்தில் தொல்காப்பியம் வெளிப்படவில்லை. அதன் காலம் சுமார் 2300 ஆண்டுகட்கு முற்பட்டதெனக் கொள்ளலாம். அக்காலத்துக்கு மும்முறை


  1. Comparative Grammar, pp. 39, 683.
  2. Ibid. p. 633.
  3. Ibid. p. 368.