பக்கம்:தமிழ்மொழி இலக்கிய வரலாறு.pdf/357

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

டாக்டர் மா.இராசமாணிக்கனார்

355


சிலப்பதிகாரத்தில் முப்பது காதைகள் உள்ளன: அவற்றுள் சில காதைகளின் ஈற்றில் சொல்லழகும் பொருளழகும் அமைந்த வெண்பாக்கள் சில காட்சியளிக்கின்றன. அவற்றுள் சிலவற்றைக் கீழே காண்க:

(1) "காலை யரும்பி மலருங் கதிரவனும் மாலை மதியமும்போல் வாழியரோ-வேலை அகழால் அமைந்த அவனிக்கு மாலைப் புகழால் அமைந்த புகார்".

(2) "நண்ணும் இருவினைபும் கண்ணுமின்கள் நல்லறமே கண்ணகி தன்கேள்வன் காரணத்தால்-மண்ணில் வளையாத செங்கோல் வளைந்ததே பண்டை விளைவாகி வந்த வினை".

(3) "காவி யுகுருேங் கையில் தனிச்சிலம்பும் ஆவி குடிபோன அவ்வடிவும்-பாவியேன் காடெல்லாஞ் சூழ்ந்த கருங்குழலுங் கண்டஞ்சிக் கூடலான் கூடாயி னான்".

(4) "மெய்யிற் பொடியும் விரித்த கருங்குழலும் கையில் தனிச்சிலம்புங் கண்ணிரும் வையைக்கோன் கண்டளவே தோற்றானக் காரிகைதன் சொற் செவியில் உண்டளவே தோற்றான் உயிர்".

வடமொழியின் செல்வாக்கு

சேர வேந்தர், தம் தாய்மொழியாகிய தமிழை வளர்த்தாற் போலவே வடமொழியையும் வளர்த்தனர்; வேத நெறி யில் நின்று வேள்விகள் செய்தனர். தமிழ்ப் புலவராய் விளங்கித் தம்மைப் பாடிய வேதியர்க்கு நிலங்களையும் பிறவற்றையும் வழங்கிச் சிறப்பித்தனர். சுருங்கக் கூறின், சேர வேந்தர் தம்காலச் சோழ பாண்டியரினும் மிகுதியாக