பக்கம்:தமிழ்மொழி இலக்கிய வரலாறு.pdf/358

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

356

தமிழ் மொழி- இலக்கிய வரலாறு


வைதிக நெறியை ஆதரித்தனர் என்னலாம். அதனால் சேர நாட்டில் வடமொழியின் செல்வாக்கு மிகுந்தது. அச்சூழ்நிலையில் வளர்ந்த இளங்கோவடிகள் தமது சிலப்பதிகாரத்தில் வடமொழிக் கதைகளையும், வடவர் சமய நம்பிக்கைகளையும் ஆங்காங்குப் பொருத்தியுள்ளார். பாாசரன் கதை, பார்ப்பணி கீரிப்பிள்ளையைக் கொன்ற கதை போன்ற கதைகளும் யமன் எருமை ஊர்தியில் வருதல் போன்ற செய்திகளும் வடவர் செல்வாக்கை உணர்த்துவனவாகும்.

அக்காலத்தில் அந்தணர் செல்வாக்கு அரசரிடம் மிகுந்திருந்தது என்பதற்குச் செங்குட்டுவன் மாடலன் சொற்படி சோழ பாண்டியர்மீது சீற்றம் தணிந்தான் என்பதும், வேத விதிப்படி வேள்வி செய்தான் என்பதும், அவனுக்குத் தன் நிறையளவு பொன்னைத் தந்தான் என்பதும் ஏற்ற சான்றுகளாகும் (காதை 27, 28, 29, 30).

வடசொற்கள்

சிலப்பதிகாரத்தில் இடம் பெற்றுள்ள வடசொற்களுள் கீழ் வருவன குறிப்பிடத்தக்கவை:

மேரு, இமயம், நாகம், நிதி, பணிலம், விதானம், நித்திலம், பாலிகை, அருந்ததி (காதை 1) , மயன், வாசம், மாதவி, தாது, தாமம். அரமியம், பரிசாரம் (காதை 2), தெய்வம், சாபம், தேசிகம், கவி, வக்கிரி, கரணம், சித்திரம், வஞ்சனை, பாகம், உத்தரம், சயந்தன், வந்தனை, புண்ணியம், தாமந்திரிகை, அந்தரம், மண்டிலம் (காதை 3), மேகலை, குணதிசை மந்தமாருதம், ஆரம், மங்கலம், அஞ்சனம், பவளம், மகரம் (காதை 4) , உதயம், காருகர், கஞ்சம், சூதர், மாகதர், வைதாளிகர், கணிகையர், வச்சிரம் மகதம், கிம்புரி, பூரணகும்பம், சுந்தரம், கணம், கமலம் (காதை 5) .

அவுணர். அமாபதி, நாரதன், உருப்பசி, நாடகம், உஞ்சை, அடவி, வருணம், வாரிதி, பாண்டரங்கம், கஞ்சன்,