பக்கம்:தமிழ்மொழி இலக்கிய வரலாறு.pdf/361

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

டாக்டர் மா. இராசமாணிக்கனார் 359

னார், செங்குட்டுவன் - இளங்கோவடிகள் காலத்தவர் என்பது ஐயமற அறியக்கிடப்பது காண்க.

இனி, இவர் பாடியுள்ள மணிமேகலை என்னும் காவியத்தில் உள்ள சிறப்புச் செய்திகளைக் காண்போம்.

நூலின் அமைப்பு

மணிமேகலை என்னும் காவியம், கோவலனுக்கும் மாதவிக்கும் பிறந்த மணிமேகலை என்னும் பெண்ணின் வரலாற்றை விரித்துக் கூறும் பெருநூல் ஆகும். இது சிலப்பதிகாரத்தைப்போலவே ஆசிரியப்பாவில் அமைந்த முப்பது காதைகளையுடையது. சிலப்பதிகாரம் கோவலன் கண்ணகி வரலாற்றை விரித்துக் கூறுவது. அதன்கண் பல சமயச் செய்திகளும் ஆங்காங்கு இடம் பெற்றுள்ளன. மேலும் அது சமண சமயப் பிரசாரத்துக்கென்று எழுந்த நூல் அன்று. மணிமேகலை என்னும் இந்நூல் மணிமேகலை வரலாற்றைப் பெளத்த சமயத்தோடு பிணைத்துக் கூறுவது: அவளது வரலாற்றைக் கூறுமுகத்தான் பெளத்த சமயமே சிறந்த சமயம் என்பதை எடுத்துக்கூறும் முறையில் அமைந்திருப்பது. ஆயினும் சிலப்பதிகாரத்தைப் போன்ற நடை, வருணனைகள், அறவுரைகள், பல சமயக் கொள்கைகள் முதலியவற்றைத் தன்பால் கொண்டிருப்பது. இது பெரும்பாலும் சமய நூலாய் அமைந்திருத்தலால் கதைகள் பலவற்றைக் கொண்டுள்ளது. விண்ணில் பறந்து செல்லுதல், மந்திரவலிமையால் உருவம் மாறுதல், பசியின்றி இருத்தல், உணவு எடுக்க எடுக்கக் குறையாத அமுதசுர பியைக் கண்டெடுத்தல், கற்புடைய மங்கையைத் தீயும் துன்புறுத்தாத நிகழ்ச்சி, தெய்வங்களே நேரிற் பேசுதல் முதலிய அரிய செயல்கள் இதன்கண் கூறப்பட்டுள்ளன. ஆயினும் உயிர்களின் பசிப்பிணி போக்குதலை மிகச் சிறந்த அறமாக இந்நூல் பல இடங்களில் வற்புறுத்துகிறது.

சிறப்புச் செய்திகள் -

1. இந்திர விழா : இஃது எவ்வாறு நடைபெற்றது என்பதை இந்நூலின் முதற்காதை நன்கு எடுத்து இயம்பு