பக்கம்:தமிழ்மொழி இலக்கிய வரலாறு.pdf/365

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

டாக்டர் மா. இராசமாணிக்கனார் 363

12. அரச நீதி : மணிமேகலைமீது காதல்கொண்ட உதயகுமரன் அவள் இருந்த இடத்திற்குச் சென்றான். அவனுக்கு அஞ்சிய மணிமேகலை காயசண்டிகை என்ற வித்தியாதர மகளது வேடத்தில் காணப்பட்டாள். உதய குமரன் அவளிடம் நெருங்கிப் பேசிக்கொண்டிருந்தான் . காயசண்டிகையைத் தேடிக்கொண்டு அங்கு வந்த அவள் கணவனான வித்தியாதரன், உதயகுமரன் தன் மனைவியுடன் பேசுவதாகவே கருதிச் சீற்றம் கொண்டான். அவன் அன்று இரவு ஒரிடத்தில் மறைந்து இளவரசனின் வருகையை எதிர்பார்த்து இருந்தான். உதயகுமரன் அன்று இரவு மணிமேகலையைச் சந்திக்க வந்தான். மறைந்திருந்த வித்தியாதரன் அரசிளங்குமரனைத் தன் வாளால் வெட்டி வீழ்த்தினான்.

மாதவர் வாயிலாக இவ்வருத்த நிகழ்ச்சியை அறிந்த, சோழமன்னன் சிறிதும் வருந்தவில்லை;

மாதவர் நோன்பும் மடவார்க் கற்பும்

காவலன் காவல் இன்றெனின் இன்றால்:

மகனை முறைசெய்த மன்னவன் வழியோர்

துயர்வினை யாளன் தோன்றினன் என்பது

வேந்தர் தஞ்செவி யுறுவதன் முன்னம்

ஈங்கிவன் தன்னையும் ஈமத் தேற்றிக்

கணிகை மகளையுங் காவல் செய் கென்றனன். '

-காதை 22, வரி 208-214

இச் சோழனுக்குப் பல ஆண்டுகளுக்கு முன்னர்க் ககந்தன் என்பவன் சோழ நாட்டை ஆண்டான். அவன் மகன் மருதி என்னும் பார்ப்பணியை, “நீ வா’’ என்று அழைத்தான். இதனை அறிந்த மன்னன் அவனைத் தன் மகன் என்றும் கருதாமல் வாளால் வெட்டி வீழ்த்தினான். இங்ஙனம் இறந்தவனுக்கு முன்னோனான அரசிளங்குமரன் விசாகை என்னும் செட்டிப் பெண்ணின் கழுத்தில் தான்