பக்கம்:தமிழ்மொழி இலக்கிய வரலாறு.pdf/370

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

368  தமிழ்மொழி - இலக்கிய வரலாறு



இறந்தோர் மருங்கிற் சிறந்தோர் செய்த

குறியவு நெடியவுங் குன்றுகண் டன்ன

சுடுமண் ஓங்கிய நெடுநிலைக் கோட்டமும். '

 - காதை 8 , வரி 54-59

பத்தொன்பதாம் காதையில் அரண்மனையைச் சேர்ந்த பூம்பொழில் வருணனை படித்து இன்புறத்தகும்(வரி56-106). அப்பூம்பொழிலின் நடுவில் பசும்பொன் மண்டபம் ஒன்று இருந்தது. அம்மண்டபம் மகத வினைஞர், மராட்டக் கம்மர், அவந்திக் கொல்லர், யவனத் தச்சர், தண்டமிழ் வினைஞர் ஆகிய ஐந்து வகையினரும் சேர்ந்து அமைத்ததாகும். அம்மண்டபத்தின் கூரை பொன்வேயப்பட்டது. அது பசிய சாணத்தால் மெழுகப்படாதது; சந்தனத்தால் மெழுகப்பட்டது என்று கொள்ளலாம்.

இருபத்தெட்டாம் காதையில் வஞ்சி மாநகரைச் சூழ இருந்த அகழியில் கலந்த பலவகை நீரும் அகழியின் சிறப்பும் படித்து இன்புறத் தக்கவை. அவற்றைக் கீழே காண்க:

“மாடமகளிர் கரிய கூந்தலை ஆட்டிய நறுமணக் கலவை நீர், எந்திரவாவிகளில் மைந்தரும் மகளிரும் நீராடுதலால் அவர் அணிந்த சாந்து கலந்தோடும் நீர், மன்னன் பிறந்தநாள் கொண்டாட்டத்தில் விசிறியும் கொம்புமாகிய கருவிகள் கொண்டு ஒருவர்மேல் ஒருவர் வீசும் நறுமண நீர், உபாசகர் துறவிகளின் திருவடிகளைத் தம் கைகளால் விளக்கும் நன்னீர், நறும்புகை கமழும் தண்ணீர்ப்பந்தர்களில் குடங்களிலிருந்து ஊற்றுகின்ற நீர், மணச் சாந்துகளை அரைப்பவர் மனைகளின் நீர் ஆகியவை அகழியில் பாய்கின்றன. அவற்றால் அகழியில் வாழும் முதலை இனங்களும் மீன்களும் தமது புலால் நாற்றத்தை நீக்குகின்றன. அவ்வகழியில் தாமரை, குவளை, கழுநீர், ஆம்பல் முதலிய பூக்கள் மலர்ந்துள்ளன. வண்டினங்கள் அம்மலர்களிலுள்ள தேனை உண்டு ஆரவாரிக்கின்றன. இத்தகைய சிறப்புடைய அகழி வில்லைப்போலக் காணப்படுகின்றது.”