பக்கம்:தமிழ்மொழி இலக்கிய வரலாறு.pdf/372

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

370  தமிழ் மொழி - இலக்கிய வரலராறு


பெற்றுள்ளமை இயல்பாகும். மணிமேகலை தலைசிறந்த பெளத்த காவியம். அதனால் இதன்கண் சிலப்பதிகாரத்தில், காணப்படும் பிறமொழிச் சொற்களைவிட மிகுதியான பிற மொழிச் சொற்கள் இடம் பெற்றுள்ளமை இயல்பேயாகும். அவற்றுள் சிலவற்றைக் கீழே காண்க:

தீவகச் சாந்தி, பூரணகும்பம், விலோதம், வாதி (காதை 1): சித்திராபதி, வயந்தமாலை, காயக்கரணம் (2): சுதமதி, சண்பை, ஆராமம், மாருதவேகன், உய்யாணம், சம்பாதிவனம், கவேரன், பகவன், உவவனம், பீடிகை, அராந்தாணம், வித்தகர், சித்திரம் (3) , உதய குமரன், மகரம் (4); சாப சரத்தி, சமணர், சங்கதருமன், குணன், வாமன், வருணம், தீர்த்தன், புராணம் (5): விஞ்சயன், வஞ்சம், தோரணம், சார்ங்கலன், கோதமை, தெய்வ கணங்கள், அசுரர். அந்தரம், யோசனை (6).

இரவிவன்மன், துரகம், துச்சையன். தாரை, வீரை, இலக்குமி (7) , பதும சதுரம், தருமபீடிகை (8): மாதவன், காந்தாரம், பூர்வதேயம் பாதலம், அசோதரம், அமுதபதி, அத்திபதி, சித்திபுரம், நீலபதி, இராகுலன், கவேரகன்னி, ஆசனம் (9); சாதுசக்கரன், இரத்தினதீவம், அமரன், அங்கம், பாதபங்கயம் (10): தீவதிலகை பூமி, சமந்தம், கோமுகி, புத்திரன். அமுதசுரபி, நாதன், பாதம், விடம் (விஷம்) (11); துடிதலோகம், மாதிரம் (12).

வாரணாசி, உவாத்தி, அவஞ்சிகன், நேமி, சிந்தா தேவி, அசலன், சிருங்கி, கம்பளன் (13); பாண்டு கம்பளம், சாவகம் (14): பிக்குணி, கோசம்பி, வத்தவன், உஞ்சை, யூகி, திப்பியம், காயசண்டிகை (15); சாதுவன், ஆதிரை, கணிகை, சாரணர். சந்திரதத்தன், அசரீரி, பத்தினி, பாடை (பாஷை), குரு. செட்டி (16) விருச்சிகன், தந்தி (யானை) , சம்பு (17) .

தாபதம், அஞ்சனம் (18) , நகுலம், மகதம், மராட்டம், தமனியம் (19); விச்சை (வித்தை) , விந்தம், அந்தரி (20);