பக்கம்:தமிழ்மொழி இலக்கிய வரலாறு.pdf/374

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

372

தமிழ் மொழி-இலக்கிய வரலாறு


சங்கயம், அநேகாந்திகம், வர்த்தித்தல், மூர்த்தம், அமூர்த்தம், சொரூபம், இந்திரியம், பரார்த்தம், சயனா சயனங்கள், சன்னு, அசன்னு, கிருத்தி, கிருத்தம், வைதன்னியம் (29); சரணாகதி, மூலம், புத்தர், சந்தி, நரகம், ஆதிக்கண்டம், உற்பவித்தல். மைத்திரி, கருணா முதிதை, சுருதி, சிந்தனாபாவனாதரிசனை, ஞானதீபம் (30).

முடிவுரை

இதுகாறும் கூறியவற்றை முறையாகப் பார்த்துவரின், சமயத்துறையில் பிற சமயத்தார் படிப்படியாகச் செல்வாக்குப் பெற்றுவந்ததையும், அவர்கள் செல்வாக்குப் பெறப் பெற, வேற்று மொழிச் சொற்களும் தமிழில் படிப்படியாக மிகுதிப்படலாயின என்பதும் இனிது புலனாகும். இந்த வளர்ச்சியை உளங் கொண்டாற்றான் அடுத்துவரும் பகுதியில் சங்க காலத்திற்குப் பின்பு உண்டான தமிழ் வளர்ச்சியை உள்ளவாறு உணர்தல் கூடும்.