பக்கம்:தமிழ்மொழி இலக்கிய வரலாறு.pdf/39

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

டாக்டர் மா. இராசமாணிக்கனார்

37


(தமல ஆக்கு-தெலுங்கு) முதலியன. லிங்க (லிங்கம்) என்பது ஆரியச் சொல் ஆகாது.[1] ‘யமன்’ என்பது வடமொழி சுடன் பெற்ற திராவிடச் சொல்.[2] மலைய, வளைய, பட்டின, கடம்ப என்பவை தமிழ்ச் சொற்களே.[3] ஆரியர் வருகைக்கு நீண்டகால முன்னரே திராவிடர் இந்தியா முழுமையும் பரவியிருந்தனர் என்பதில் ஐயமில்லை.[4]

“த, ட-இவற்றை முதலாகக் கொண்ட சொற்கள் ‘சிந்தி மொழியில்’ ஆரியச் சொற்களாகக் காணப்பட்டில. ‘த, ட’ இரண்டுமே ஆரியத்துக்கே புதியவை. எனவே, இவை பழைய இந்திய மொழி ஒன்றிலிருந்து கடன் பெற்றனவாதல் வேண்டும். இவை திராவிட மொழிக்கே உரியவை.”[5]

“இந்து எண்ணங்கள் முதலியன உரம் பெறாத ரிக்வேத காலத்திலேயே திராவிட மொழியும் திராவிடர் பழக்கவழக்கங்களும் ஆரியர் மதத்தையும் அவர் தம் மொழியையும் தாக்கியுள்ளன என்பது அறியக் கிடக்கின்றது. ரிக்வேதத்தில் ‘மறுபிறவி’ பற்றிய பேச்சே இல்லை. திராவிடர் தெய்வங்கள் (சிவன், முருகன், கொற்றவை முதலியன) ஆரிய வேதங்களில் இடங்கொண்டன. ரிக்வேத நடை, மொழி, உணர்ச்சிகள் என்பவை தூய ஆரிய முறையில் இருப்பினும், உச்சரிப்புத் திராவிட மொழியால் மாறுதல் பெற்றுவீட்டது; ரிக்வேத வடமொழி, திராவிடத்தினின்றும் கோல் மொழிகளிலிருந்தும் வார்த்தைகளைக் கடன் பெற்று விட்டது. திராவிட மொழிக் கலப்பு வடமொழியில் மிகுந்த


  1. Pre-Aryan and Pre-Dravidlan in india, Ind, p. 20
  2. Dr. Kittel, Kannada Dictionary, preface, p. 22.
  3. Dravidic Studies, part ill, pp. 14, 26
  4. C. Narayana Rao, An Introduction to Philology. pp. 104, 105, 147
  5. Dravidic Studies, part iii, p. 58