பக்கம்:தமிழ்மொழி இலக்கிய வரலாறு.pdf/67

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது



6. சங்ககால வரலாறு
(கி. மு. 1000-கி. பி. 300)
(1) கடல் வாணிக வரலாறு

உள்நாட்டு வாணிகத்திலும் கடல் வாணிகத்திலும் சிறப்புற்ற நாடே நாகரிக நாடு என்பது பொதுக் கருத் தாகும். வாணிகமே ஒரு நாட்டுச் செல்வ வளத்தைக் கணிக்கும் அளவு கோலாகும். கிறிஸ்துப் பெருமானுக்கு முற்பட்ட பல நூற்றாண்டுகளிலேயே தென்னிந்தியர் கடல் வாணிகத்திற் சிறந்திருந்தனர் என்று அயல் நாட்டார் எழுதிவைத்த குறிப்புகளைக் கொண்டும் புதைபொருள் ஆராய்ச்சி கொண்டும் அறிஞர் கூறுகின்றனர். அவர்கள் கூறுவனவற்றுள் சிலவற்றைக் கீழே காண்க.

கிறிஸ்துவுக்கு முன்பு

கி. மு. 10 ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த சாலமன் அரசனுக்குத் தமிழ் நாட்டிலிருந்து கப்பல்கள் வாயிலாக மயில் தோகை, யானைத்தந்தம், மணப்பொருள்கள் முதலியன சென்றன. ஈப்ரு மொழியிலுள்ள துகி என்பது தமிழ்த் தோகை என்பதாகும்; அகல் என்பது அகில் என்பதாகும்.

திமில் உடைய எருதுகள் பாரசீக வளைகுடாவிற்கும் ஆப்பிரிக்காவிற்கும் தமிழகத்திலிருந்து அனுப்பப்பட்டன. பொனிசியருடைய கப்பல்களில் சேரநாட்டு மிளகு மிகுதியாக ஏற்றுமதி செய்யப்பட்டது. அக்காலத்தில் ஏடன் சிறந்த துறைமுகப்பட்டினமாக இருந்தது. தமிழ் வணிகர் கொண்டு

த-5