பக்கம்:தமிழ்மொழி இலக்கிய வரலாறு.pdf/69

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

67


கொண்டது. சூயஸ் கால்வாய் வழியாகவும் வாணிகம் நடைபெற்றது. இவ்வாணிகத்தால் எகிப்து, முன்பு இழந்த வாணிகப் பெருமையை மீண்டும் பெற்றது. கி. மு. 3 ஆம் நூற்றாண்டில் பேரரசனாய் விளங்கிய முதலாம் தாலமியின் ஊர்வலங்களில் இந்தியப் பெண்கள் காணப்பட்டனர்; இந்திய வேட்டை நாய்களும், இந்தியப் பசுக்களும், இந்திய மணப் பொருள்களும் காணப்பட்டன.

கிறிஸ்துவுக்கு முற்பட்ட முதல் ஐந்து நூற்றாண்டுகளில் இந்தியாவிற்கும் ஐரோப்பாவிற்கும் நடைபெற்ற வாணிகத்தில் கிரேக்கர் சிறந்த பங்கு கொண்டனர். அவர்கள் மொழியில் அரிசி, என்பது ஒரிஸா’ என்றும், கருவா என்பது கர்ப்பியான்’ என்றும், இஞ்சிவேர் என்பது சிக்கி பெரஸ் (ziggiberos) என்றும், பிப்பிலி என்பது 'பெப்பரி' என்றும் மாறி வழங்கலாயின.

ரோமப் பேரரசனான அகஸ்டஸ் ஏறத்தாழ கி. மு. 30 இல் எகிப்தைக் கைப்பற்றினான். அவன் ரோமப் பெரு நாட்டுக்கும் இந்தியாவுக்கும் நேரான கடல் வணிகத்தை வளர்க்க முயன்றான். பாண்டியனிடமிருந்து வணிகர் தூதுக்குழு கி. மு. 21 இல் அப்பேரரசனைச் சென்று கண்டது. அப்போது நடைபெற்ற வாணிகத்தில் இந்திய வாணிகமே ரோமப் பெருநாட்டு வாணிகத்தைவிடச் சிறந் திருந்தது. பண்டமாற்றுக் குறைவாக இருந்தமையால், ரோம நாணயங்கள் மிகுதியாகச் செலவாயின."

சீனத்துப்பட்டும் பிறபொருள்களும் தரைவழியாக மேலைநாடுகளுக்குச் சென்றதோடு, கடல் வழியாகவும் சென்றன. தமிழர் அவற்றைச் சூயஸ் கால்வாய் வரையில் கொண்டு சென்று யவன வணிகர்களுக்கு விற்றுவந்தனர்.

பர்மா, மலேயா, சீனம் முதலிய நாடுகளுடன் தமிழகம் வாணிகம் செய்துவந்தது. தமிழகப் பொருள்களுள் மிகச்

3. P. T. S. Ayyangar, History of the famils, pp.

192–196. : - -