பக்கம்:தமிழ்மொழி இலக்கிய வரலாறு.pdf/71

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

69


கொடுத்து வாங்கியதால், ரோம் நாடு ஆண்டுதோறும் இந்தியாவிற்கு (தமிழகத்திற்கு) ஏறக்குறைய ஆறு லட்சம் பவுன் கொடுத்து வந்தது. ரோமாபுரி இராணிகளும் சீமாட்டி களும் முத்துகளை அணிவதில் பெரும் பொருளைச் செலவிட்டனர். அதனால் ரோம் நாட்டு அரசியல் தலைவர்கள் முத்துகளைப் பயன்படுத்திய பெண்மணிகளை வன்மையாகக் கண்டித்தனர்.[1]

"இங்ஙனம் பெண்கள் முத்துகளை அணிந்து வருவதால் ரோமப் பெருநாட்டின் செல்வம் வற்றிவருகிறது" என்று திபெரியஸ் (கி. பி. 16-37) என்ற ரோமப் பேரரசன் செனட் சபைக்கு எழுதியுள்ளான். இதைக்கொண்டு முத்து வாணிகம் எந்த அளவு ரோமப் பெருநாட்டில் நடந்திருத்தல் வேண்டும் என்பதை எளிதில் அறியலாம். தமிழகத்துப் பொருள்களுக்குப் பதிலாக ரோம்நாட்டுப் பொன், வெள்ளி நாணயங்கள், மதுவகைகள் என்பவை தமிழகத்துக்கு அனுப்பப்பட்டன.[2]

தமிழகத்திலிருந்து ரோமப் பெருநாட்டிற்குச் சென்ற ஒவ்வொரு கப்பலிலும் பாதிக்கு மேற்பட்ட சரக்குமிளகாகவே இருந்தது. ஏலக்காய், இலவங்கப்பட்டை, வெல்லப்பாகு, நல்லெண்ணெய் முதலியனவும், உறையூரில் நெய்யப்பட்ட மிகவுயர்ந்த மெல்லிய ஆடை வகைகளும் ரோம் நாட்டுக்கு அனுப்பப்ட்டன; தேக்கு அகில், சந்தன மரத்துண்டங்களும் அனுப்பப்பட்டன. தேங்காய் , நெய், வாழை, அரிசி, சோளம் , கம்பு முதலிய கூலங்கள், புளி[3], வெற்றிலை, பாக்கு, மூலிகைகளான மருந்து வகைகள் முதலியனவும். ஏற்றுமதி செய்யப்பட்டன. முசிறித் துறைமுகத்திலிருந்து


  1. R. Sathyanatha Ayyar, History of India. voiI, pp. 222–223.
  2. P. T. S. Ayyangar, History of the Tamils, pp. 304–305.
  3. கரும்பு, வெல்லம் சேர்க்கப்பட்ட புளி ஏற்றுமதி செய்யப்பட்டது என்று மதுரைக் காஞ்சி (வரி 318) கூறியுள்ளது.