பக்கம்:தமிழ்மொழி இலக்கிய வரலாறு.pdf/73

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

71


டாக்டர் மா.இராசமாணிக்கனார்

                         71

கரைத் துறைமுகங்களிலிருந்து பெரிய கப்பல்கள் கங்கைக்கும் பர்மாவுக்கும் சென்றன என்று கூறியுள்ளார்.

கி. பி. 150 இல் தமது குறிப்பு நூலை வரைந்த தாலமி என்பவர் பெரிப்ளுஸ் நூலாசிரியரைவிடத் தமிழகத்தைப் பற்றி மிகுதியான விவரங்களைத் தந்துள்ளார். அவர் தென்னிந்தியாவைப் பார்க்கவில்லை; ஆயினும் அவர் இந்தியாவில் தங்கியிருந்த தம்மவர் கூறியவற்றையே விவரமாக எழுதியுள்ளார். அவற்றை நோக்க, தமிழகத்தை முடியுடைய மூவேந்தரும் சிற்றரசர் பலரும் ஆண்டுவந்தனர் என்பதும் , மூவேந்தரும் ஏறத்தாழச் சமநிலையில் இருத்தனர் என்பதும் தெரிகின்றன. சேரர், ஆயர், கரையார் (கரையாளர்) , பாண்டியர், பரதர், சோழர், அருவாளர் எனப் பல இனத்தவர் தமிழகத்தில் இருந்தனர் என்று அவர் குறித்துள்ளார். கருவூர், மதுரை, உறையூர்,மாவிலங்கை, தொண்டி,முசிறி,கொட்டாரக்கரை, கோட்டயம், பொரக்காடு, குமரி, கொற்கை, நாகப்பட்டினம், பொதுசா (புதுச்சேரி) , சோபட்டினம் (மரக்காணத்திற்கு அண்மையில் இருந்த நகரம்), கோடிக்கரை காவிரிப்பூம்பட்டினம்,' மோகூர் முதலிய நகரங்கள் அவரால் கண்டறியப்பட்டுள்ளன.

மதுரையில் வைகை ஆற்றங்கரைப் பகுதிகளிலும் பிற வெளியிடங்களிலும் கணக்கற்ற ரோமச் செம்பு நாணயங்கள் கிடைத்துள்ளன. இவை மதுரையில் இருந்த யவன வணிகர் தம்முள் வழங்கிவந்த நாணயங்கள் ஆகலாம். எனவே, யவனர் பலர் மதுரை மாநகரில் தங்கியிருந்திருக்கலாம் என்று ஆராய்ச்சியாளர் கருதுகின்றனர்."

11. Karikala did not found Kavirippumpattinam, for it existed a thousand years before his time, since it is mentioned in the Jataka Tales, and probably was a sea port long before those Tales were born, - P. T. 5. Ayyangar, History of the Tamlis, p. 363.

12. P. T. S. Ayyangar, History of the Tamiis,

- -- pp. 309–312.