பக்கம்:தமிழ்மொழி இலக்கிய வரலாறு.pdf/74

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

தமிழ் மொழி-இலக்கிய வரலாறு

                          72

தாலமி போன்ற யவன ஆசிரியர்கள் கொற்கை, குமரி, நாகப்பட்டினம், காவிரிப்பூம்பட்டினம், பொதுசா (புதுச்சேரி) சோபட்டினம், முசிறி முதலிய தமிழகத்துத் துறைமுகப் பட்டினங்களைக் குறிப்பிட்டுள்ளனர். சேரநாட்டுக் கடற்கரையில் யவனர் குடியிருப்பும் அகஸ்டஸ் கோயிலும் இருந்தன. இன்றைய புதுச்சேரிக்கு அண்மையில் பழைய காலத்தில் ரோமர் தொழிற்சாலை இருந்தமைக்குரிய சான்றுகள் கிடைத்துள்ளன. யவனர் தமிழரசர் மெய்காவலராகத் தமிழரசர் அரண்மனைகளில் இருந்தனர்.'13

யவனப் பொறியியல் அறிஞர்கள் தமிழரசர்க்குப் பல போர்ப் பொறிகளைச் செய்து தந்தனர். அவை இன்னவை.

என்பதைச் சிலப்பதிகாரத்தில் காணலாம். அவை மதுரையில் இருந்த கோட்டையின் சிறப்பு வாயிலின்மீதும் கோட்டைச் சுவர்மீதும் வைக்கப்பட்டிருந்தன. யவனத் தச்சரும் தமிழகத்தில் இருந்து பல பொருள்களைச் செய்து கொடுத்தனர். இவை அனைத்தையும் நோக்க, யவனர்க்கும் தமிழர்க்கும் இருந்த வாணிக உறவு நன்கு புலனாகும்'14

கி. பி. இரண்டாம் நூற்றாண்டில் வரையப்பட்ட கிரேக்க பரிகாசக் கூத்து நூலில் பழைய கன்னட வாசகங்கள் இடம் பெற்றுள்ளன. அக்காட்சி, தென்கன்னட மாவட்டத்தைச் சேர்ந்த உடுப்பிக்கு அருகில் உள்ள மால்பே என்னும் இடத்திற்கு அண்மையில் நடைபெற்றதாக அந்நூல் கூறுகிறது."15 இதனால் கிரேக்கருக்கும் கன்னடருக்கும் இருந்த வாணிகத் தொடர்பு நன்கு புலனாகும். -

இதுகாறும் கண்ட செய்திகள், தமிழகம் ஏறத்தாழக் கி. மு. ஆயிரம் முதலே கடல் வாணிகத்திற் சிறந்திருந்தது. 13. History of Ceylon, voi. 1, Part I, pp.213–214. 14. P. T. S. Ayyangar, History of the Wamils,pp. 312–316. . . 15. R. Sathyanatha Aiyar, History of India.Vol. I.p. 222.