பக்கம்:தமிழ்மொழி இலக்கிய வரலாறு.pdf/75

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

73


என்னும் வரலாற்று உண்மையை நன்கு தெரிவிக்கின்றன அல்லவா?

தமிழ் இலக்கங்கள் ஒன்றுக்குக் கீழ்ப்பட்ட பின்னங்களையும் உடையவை. 1/320×1/21 = இம்மி

1/320×1/21×1/7= அணு 1/320×1/21×1/7×1/11 = மும்மி

1/320×1/21×1/7×1/11×1/9=குணம்

தமிழர் இவற்றைக் கீழ்வாய் இலக்கம் என்பர். இந்தப் பின்ன அளவைகளே தமிழரது வாணிகச் சிறப்பை விளக்கப் போதியவையல்லவா? இப்பின்ன அளவைகள் தமிழைத் தவிரப் பிற திராவிட மொழிகளில் இல்லை என்பதும் இங்கு அறியத்தகும். மேலும், எண்களைக் குறிக்கத் தமிழர் தமிழ் எழுத்துகளையே பயன்படுத்தினர் என்பதும் அறியத்தகும்.

(2) இந்திய வரலாறு

சங்ககாலம் மிகப் பரந்துபட்ட கால எல்லையை உடையது என்பதும், அதன் கீழ் எல்லை ஏறத்தாழக் கி.பி.300 என்பதும் மேலே அறியப் பெற்றன. அக்கால இந்திய அரசியல் செய்திகளையும் அப்பழைய காலத்தில் தமிழ்நாடு பிற இந்தியப் பகுதிகளுடனும் அயல்நாடுகளுடனும் வாணிகத் தொடர்பு கொண்டிருந்ததையும் இங்கு அறிவது, தொல் காப்பியம் போன்ற சங்க நூல்களைப் பற்றி அறியப் பெருந்துணை புரிவதாகும்.