பக்கம்:தமிழ்மொழி இலக்கிய வரலாறு.pdf/81

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

79


அசோகன் குறித்த சத்திய புத்திரர் கொங்கு நாட்டை ஆண்டவராவர்." . -

அசோகனது முயற்சியால் சேர சோழ பாண்டிய நாடு களில் பெளத்த சமயப் பிரசாரகர் சென்றனர் என்பது முன்பு கூறப்பட்டதன்றோ? மதுரை, திருநெல்வேலி மாவட்டங்களைச் சேர்ந்த கழுகுமலை போன்ற மலைகளில் குகைகள் இருக்கின்றன. அக்குகைகளில் பிராமி எழுத்துகளில் சில கல்வெட்டுகள் காணப்படுகின்றன. அவை கி.மு 3-ஆம் நூற்றாண்டின் பிற்பாதியில் எழுந்தவை என்று கூறலாம். எனவே, அசோகன் காலத்தில் பெளத்த பிட்சுகள் தமிழகத்தில் தங்கலாயினர் என்று கொள்ளுதல் பொருத்தமாகும்." அசோகனுக்குப் பின்பு

ஏறத்தாழக் கி.மு 188இல் புஷ்யமித்ரசுங்கன் என்பவன் மகதநாட்டு மன்னனானான். அவனுக்குப் பின்பு, அவன் மரபினர் சிறிது காலம் அரசாண்டனர். சுங்கர் ஆட்சியில் வைதிகர் செல்வாக்குப் பெற்றனர்; இராமாயண பாரத நூல்கள் திருத்தி எழுதப்பட்டன; பிரமன், விஷ்ணு, சிவன் ஆகிய மூவரும் சமநிலையில் வைக்கப்பட்டனர்." இராமனும் கிருஷ்ணனும் விஷ்ணுவின் அவதாரங்களாகக் கருதப்பட்டனர். ஒரு சாரர் சிவனை உயர்த்தினர், மற்றொரு சாரர் விஷ்ணுவை உயர்த்தினர்: கீதை முடிவான உருவெடுத்தது. கிருஷ்ணன் விஷ்ணுவின் முழு அவதாரம் என்று கருதப் 29, Do. History of Ancient Whondaimandalam,

pp., 4-6. . 30. Do. History of India, Vol. 1, p. 171. stop;#51 கள் தமிழ் உச்சரிப்பிற்கேற்ற தென்பிராமி எழுத்துகள். அவை: கூறும் மொழி தமிழேயாகும்.-K. A. N. Castry, A History of india, p. 87.

31. புறநானூறு போன்ற சங்க நூல்களில் சிவன், முருகன், திருமால், பலதேவன் ஆகிய நால்வரும் தோலா நல்லிசைநால்வர் ' என்று சமமாகக் கூறப்பட்டுள்ளனர்.