பக்கம்:தமிழ்மொழி இலக்கிய வரலாறு.pdf/82

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

80

தமிழ் மொழி-இலக்கிய வரலாறு

பட்டான்; ' பகவான்' என்று அழைப்புண்டான். அவனுடைய கதைகள் பொதுமக்களிடம் பரவின. அம்மதத்தைப் பின்பற்றியவர் 'பாகவதர் எனப்பட்டனர். அவன் வரலாற் றைக் கூறும் நூல் 'பாகவதம்’ எனப்பட்டது."32

சுங்கர்களுக்குப் பின்பு கன்வர் மரபினர் மகதநாட்டை 45 ஆண்டுகள் ஆண்டனர். அவர்களுக்குப் பின்பு ஆந்திரப் பேரரசு இந்தியாவில் ஏற்பட்டது.

கி.மு. 176 முதல் 163 வரையில் கலிங்கப் பேரரசனாய் இருந்த காரவேலன் மகதநாட்டை வென்றான்; தனக்கு முன்பு 113 ஆண்டுகளாய் இருந்த தமிழரசரது வலிமை மிகுந்த கூட்டணியை அழித்தான்."33 பாண்டியன் அவனுக்கு முத்துகளையும் யானைகளையும் பரிசாக வழங்கினான்.34

சிறந்த வடமொழிப் புலவரான பதஞ்சலி ஏறத்தாழக் கி.மு. 150இல் வாழ்ந்தவர். அவர் காஞ்சி நகரைக் குறிப் பிட்டுள்ளார். எனவே, தொண்டைமண்டலம் அப்பொழுது

32. D. A. Pai, A Monograph on the Religious Sects in India among the Hindus, pp. 30–34; usurlலிலும் கலித்தொகையிலும் திருமால் சிறப்புறப் பேசப்பட் டுள்ளமை காணலாம் .

33. R. Sathyanatha Aiyyar, Histoty of India, Vol 1, p. 178; காரவேலன் கி. மு. இரண்டாம் நூற்றாண்டின் முற் பகுதியைச் சேர்ந்தவன். அவன், தமிழரசர் 118 ஆண்டுகளாகத் தம்முள் கூட்டணி அமைத்திருந்தனர் என்று கி. மு. 165இல் கூறியுள்ளான். அஃதாவது, கி. மு. மூன்றாம் நூற்றாண்டிலேயே தமிழரசர் கூட்டணி அமைத்திருந்தனர் என்பது பொருளாகும். அக்கூட்டணி மெளரியரை விரட்டவே அமைக்கப்பட்டது எனக்கொள்வது பொருத்தமாகும். தொகை நூல்களில் வரும் ஆரியர் பற்றிய போர்களில் கார வேலன் போரும் ஒன்றாகலாம்.

34. History of Ceylon, Vol. I, pat I, p. 209.