பக்கம்:தமிழ்மொழி இலக்கிய வரலாறு.pdf/83

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

டாக்டர் மா. இராசமாணிக்கனார்

                         81

சோழராட்சிக்கு உட்படாமல் தொண்டையர் என்ற திரையர் ஆட்சியில் இருந்திருத்தல் வேண்டும்."35

அலெக்ஸாண்டர் பஞ்சாப் நிலப் பகுதியைக் கைப்பற்றி மீண்ட பின்பு, அப்பகுதியையும் இன்றைய ஆப்கனிஸ்தானம், பலுஸிஸ்தானம் முதலிய பகுதிகளையும் கிரேக்கர்கள் அரசாளத் தொடங்கினர். அவர்களுள் மினான்டர் என் பவன் ஒருவன். அவன் புத்த சமயத்தின்பால் பற்றுக் கொண்டவன், நாகசேனர் என்ற பெளத்த முனிவர் அவனைப் பெளத்தனாக்க முயன்றார். அப்பொழுது அவன் கேட்ட கேள்விகளும் அவற்றுக்கு நாகசேனர் அளித்த விடைகளும் மிலிந்த பன்ஹ (Milinda panha) என்ற பெயர் கொண்ட நூலாக வெளியானது. அது பாலி மொழியில் எழுதப் பெற்றது. அதன் காலம் ஏறத்தாழக் கி. பி. முதல் நூற்றாண்டாகும்."36

மினாண்டருக்குப் பின்பு ஏறத்தாழ ஒரு நூற்றாண்டு வரையில் இந்தியாவின் வடமேற்குப் பகுதியைக் கிரேக்கர்கள் ஆண்டனர். அக்காலத்தில் (கி. மு. இரண்டாம் நூற்றாண்டில்) சாகர் அல்லது சித்தியர் என்னும் புதிய இனத்தவர் நடு ஆசியாவிலிருந்து இந்தியாவினுள் நுழைந்தனர். அவர்கள் (வட) மதுரை, தட்சசீலம் முதலிய

35. R. Sathyanatha Aiyar, Ancient History of Thondaimandalam, p 6: சங்க நூல்களில் திரையன், இளந் திரையன் பற்றிய குறிப்புகள் வந்துள்ளன.

36. மிலிந்த - மினாண்டர்; பன்ஹ - வினாக்கள். R. Sathyanatha Aiyar, History of India, vol, I, p. 229; ஏறத்தாழ இந்நூற்கேள்வி-விடைகளைப் போலவே சம்பந்தர்-புத்தர் வாதத்தில் எழுந்த வினா-விடைகள் இருத்தலைப் பெரிய புராணத்திற் காணலாம்; சம்பந்தர் புராணம்-915-924.

த-6