பக்கம்:தமிழ்மொழி இலக்கிய வரலாறு.pdf/84

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

82

தமிழ் மொழி-இலக்கிய வரலாறு

இடங்களிலிருந்து ஆளத் தொடங்கினர். அவர்கள் இராச ராசர் என்ற பட்டத்தை மேற்கொண்டனர்.37 சாகர்களுக்குப் பின்பு குஷானர் என்ற புதிய இனத்தவர் இந்தியாவிற்கு வந்து சில பகுதிகளைக் கி. மு. முதல் நூற்றாண்டில் ஆளத் தொடங்கினர். அம்மரபில் மிகச் சிறந்தவன் கனிஷ்கன். ஆயின், குஷானர் தனிப்பட்ட இனத்தவர் அல்லர். அவர்களும் சாகர் இனத்தவரே” என்று இப்பொழுது ஆராய்ச்சியாளர் கருதுகின்றனர்; கனிஷ்கன் என்னும் சக மன்னன் கி பி. 78இல் மன்னனானான் அது முதல் சக அப்தம் (சகாப்தம்) ஆட்சிக்கு வந்தது.38 சக அப்தத்திற்கு 'சாலிவாகன' அல்லது சாதவாகன என்பது சேர்த்து வழங்கப்பட்ட காலம் கி. பி. 1272 என்பது இங்குக் கவனிக்கத்தகும். எனவே, சாலிவாகன சகாப்தம்' அல்லது 'சாதவாகன சகாப்தம்’ என்று கூறுவது பொருத்தமற்றது."39

கனிஷ்கன் கி. பி 78 முதல் 120 வரையில் அரசாண்டான். அவன் வடஇந்தியாவின் பெரும் பகுதிக்குப் பேரரசனாய் விளங்கினான். அவன் பெளத்த சமயத்தைத் தழுவினான். புத்தர் உபதேசித்த கொள்கைகள் ஹீனயான (சிறுவழி) பெளத்தத்தைச் சேர்ந்தவை. கனிஷ்கன் காலத்தில் பெருகிப் பரவிய பெளத்தம் மஹாயானம் (பெருவழி) எனப்பட்டது. பெருவழியில் புத்த விக்கிரகம் வைத்து வழிபடுதலும் சடங்குகளும் ஏற்பட்டன. பிரார்த்தனையும் சிறந்த ஒழுக்கமுடைமையும் வற்புறுத்தப்பட்டன. அறவழி காட்டிய புத்தரை மதித்துப் போற்றலே சிறுவழியின் உயிர் நாடியாய் இருந்தது."40

37. R. Sathyanatha Aiyer, History of ndia, vol. I, p. 184. 38. Ibid. pp. 185–189. 39. Ibid. P. 187. 40. தமிழில் உள்ள மணிமேகலை என்னும் பெளத்த காவியத்தில் கூறப்பட்டுள்ளது ஹீனயான பெளத்தமாகும்.