பக்கம்:தமிழ்மொழி இலக்கிய வரலாறு.pdf/85

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

83


குஷானர் ஆட்சிக்குப் பிறகு ஏறத்தாழக் கி. பி. 180இல் பாரசிவர் என்று பெயர் கொண்ட அரச மரபினர் வடஇந்தி யாவின் பெரும் பகுதியை ஆளத்தொடங்கினர். இவர்கள் நாக மரபினர். இவர்கள்,பின்வந்த குப்தர்களால் கி.பி.4 ஆம் நூற்றாண்டில் ஒடுக்கப்பட்டனர்.

சாதவாகனர்

ஏறத்தாழக் கி.மு.235 முதல் கி.பி.220 வரையில் சாதவாகனர் என்ற ஆந்திர அரசர்கள் கங்கைக்கும் கிருஷ்ணைக்கும் இடைப்பட்ட நிலப்பகுதியை ஆண்டு வந்தனர். இவர்கள் சாதவாகனர் என்றும் சதகர்ணிகள் என்றும் பெயர் பெற்றனர். சதகர்ணிகள் என்பவர் தமிழில் நூற்றுவர் கன்னர்' என்று சிலப்பதிகாரத்தில் இளங்கோ அடிகளால் குறிக்கப்பெற்றனர்: ஆந்திரப் பேரரசருள் கெளதமீபுத்ர சதகர்ணி (கி. பி. 106-130) என்பவன் மிக்க புகழ் பெற்றவன். அவனது ஆட்சியில் மகாராட்டிரம், வடகொண்கானம், பீரார், கூர்ச்சரம், கத்தியவார், மாளுவம் ஆகிய நாடுகள் சேர்ந்திருந்தன. அவனுக்குப் பின்பு ஆந்திரப் பேரரசு வரவர அளவிற் சுருங்கத் தொடங் கிக் கி.பி.220இல் மறைந்தது.

ஆந்திரப் பேரரசின் தென்பகுதி மாகாணங்கனை இக்கு வாகர், பிருகத் பலாயனர், சாலங்காயனர் என்பவர் மாகாணத் தலைவராய் இருந்து ஆண்டு வந்தனர். பல்லாரி மாவட்டத்தைப் பல்லவர் என்பவர் சாதவாகனர் சார்பில் ஆண்டு வந்தனர். ஆந்திரப் பேரரசின் வன்மை குறைந்தவுடன் இம்மாகாணத் தலைவர்கள் தாம்தாம் ஆண்டு வந்த மாநிலங்கட்குத் தாமே அரசராயினர்." பல்லவர் தொண்டை

41. நூற்றுவர் கன்னர் செங்குட்டுவன் நண்பர் என்று சிலப்பதிகாரம் செப்புகிறது.

42. R. Sathyanatha Alyar, History of India, part 1, pp. 207 & 210.