பக்கம்:தமிழ்மொழி இலக்கிய வரலாறு.pdf/98

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

9 6 தமிழ் மொழி-இலக்கிய வரலாறு

'சகரக் கிளவியும் அவற்றோரற்றே

அஐ ஒளவெனும் மூன்றலங் கடையே.'

(எழுத்து நூற்பா 82) இவ்விதிக்கு மாறாகப் புறநானூற்றில் சடை , சமம்", சகடம் என்னும் சொற்கள் வந்துள்ளன. (செ. 1, 14, 10:) பத்துப்பாட்டில் சவட்டி’, ‘சலம்' , 'சந்து' என்பவை இடம் பெற்றுள்ளன) பெரும்பாண், வரி 217; மதுரைக் காஞ்சி. வரி 112; மலையடு, வரி, 392) : பதிற்றுப்பத்தில் சவட்டும்' என்பது வந்துள்ளது (செ. 84). திருக்குறளில் சமம்' , ' சமன்’ என்பன வந்துள்ளன (குறள் 99, 112). - (2) ஞகர மெய் ஆ, ஏ, ஓ, என்னும் மூன்று உயிரோடு மட்டுமே கூடி மொழிக்கு முதலில் வரும் என்பது தொல்காப்பிய விதி.

'ஆ எஒ, எனு மூவுயிர் ஞகாரத் துரிய (எழுத்து. 64) இவ்விதிக்கு மாறாகப் புறநானூற்றில் ஞமன்', ஞமலி ", திமிறு' என ஞகர மெய் அகர இகரத்துடன் கூடி முதலில் வந்துள்ளது (செ. 6, 74. 93); அகநானூற்றில் திமிறு ஞமலி என்பன இடம் பெற்றுள்ளன (செ. 59, 140 , 388); பதிற்றுப்பத்தில் ஞரல’ என்பது வந்துள்ளது (செ. 30) . பட்டினப்பாலையில் ஞமலி என்பது காணப்படுகின்றது (வரி 140) .

(3) யகரமெய் ஆ என்னும் உயிரோடு மட்டும் மொழிக்கு முதலில் வரும். ஏனைய பதினொரு உயிர்களோடும் மொழிக்கு முதலில் வராது என்பது தொல்காப்பிய விதி - -

ஆவோ டல்லது யகர முதலாது." (எழுத்து. 65) இவ்விதிக்கு மாறாக யவனர்' என்னும் சொல் சங்க இலக்கியங்களில் வழக்குப் பெற்றுள்ளது.'

1. புறநானூறு, 56;பெரும்பாண்ற்றுப்படை, வரி 316; முல்லைப்பாட்டு, வரி 61; நெடுநல்வாடை, வரி 101; சிலப்பதிகாரம், காதை 5 வரி 10: காதை 14 வரி 67; காதை 29, வரி 25: மணிமேகலை, காதை 19 வரி 108 முதலியன.