பக்கம்:தமிழ்மொழி இலக்கிய வரலாறு.pdf/99

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

97


(4) தொல்காப்பியத்தில் கூறப்பட்டுப் பிற்காலத்தில் வழக்கொழிந்த சொற்கள் சில; அவை சுட்டு முதலாகிய இகர இறுதியும் என்று தொடங்கும் நூற்பாவில் (எழுத்து, 159) குறிக்கப்பட்ட அதோளி' (அவ்விடம்), "இதோளி', உதோளி", எதோளி' என்னும் சொற்கள். அவை, இன்றுள்ள சங்க நூற் பாடல்களில் இடம் பெற்றில என்பது கவனிக்கத் தக்கது.

(5) நான்கு என்னும் எண்ணுப் பெயர் பிற சொற்களோடு சேரும்போது எவ்வாறு புணரும், எவ்வெவ்வாறு திரியும் என்பன பல நூற்பாக்களில் கூறப்பட்டுள்ளன. (நூற்பா 442, 453, 462, 467, 475). ஆயின், அக நானூற்றில், நன்னால்கு பூண்ட கடும்பரி நெடுந்தேர்", (செ.104) என்னும் வரியில் நான்கு-நால்கு' என்று திரிந்துள்ளமைக்குத் தொல்காப்பியத்துள் விதி கூறப்படவில்லை என்பது கவனிக்கத் தக்கதாகும்.

(6) தொல்காப்பியர் ஒன்று முதல் பத்து, நூறு, ஆயிரம், நூறாயிரம் வரையில் உள்ள எண்களுக்குப் புணர்ச்சி விதி கூறியுள்ளார் (எழுத்து, 488-471), நூறு நூறாயிரமாகிய கோடி என்னும் எண்ணினைப் பற்றி அவர் யாண்டும் கூறவில்லை. இதனால் அவர் காலத்தில் கோடி' என்னும் எண் வழக்கில் இல்லை என்பது தெரிகிறதன்றோ? ஆயின், கோடி' என்னும் எண் புறநானூற்றில் இடம் பெற்றுள்ளது.

ஒன்றுபத் தடுக்கிய கோடி கடையிரீஇ

பெருமைத் தாககின் ஆயுள் தானே.” (செ. 18) திருக்குறளில்,

கோடி தொகுத்தார்க்கும் துய்த்தல் அரிது.”

(குறள் 377)

என வந்துள்ளமை காண்க.

த-7