பக்கம்:தமிழ்மொழி வளர்ச்சியில் பாரதியின் உரைநடை.pdf/10

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

உமிழ்மொழி வளர்ச்சியில் பாதியின் உரைநடைஅடக்னிவாசன் 5 பாரதியின் இலக்கியப் பணிகள் கவிதை, கட்டுரை, செய்திக் கட்டுரை, செய்தி விமர்சனம், முதலிய பலவகை உரைநடைத் தமிழையும் எழுதியுள்ளார். சுதந்திரப் போராட்ட காலத்தில் அவருடைய தேசபக்தப் பாடல்கள் பலவும் பிரபலமடைந்தன. ஆயினும் பாரதியின் முழுவடிவத்தை அப்போது தமிழ் மக்கள் காணவில்லை. படிப்படியாகத்தான் பாரதியை தமிழ் உலகம் அறிந்து கொள்ளத் தொடங்கியது. இன்னும் பாரதியை அறிந்து கொள்ள வேண்டியதும் புரிந்து கொள்ள வேண்டிய விஷயங்களும் ஏராளமாக உள்ளன. இன்று பாரதி ஒரு தேசீய மகாகவி என்பதாக அடையாளம் காணப்பட்டுள்ளார். தமிழகத்தில் பல ஊர்களிலும் நகரங்களிலும் கிராமங்களிலும் பாரதி மன்றங்கள் தொடங்கப்பட்டு அவருடைய புகழ் பரப்பப்பட்டுவருகின்றது. அவருடைய பாடல்கள் பலவும் மேடைகளிலும் நாடகங்களிலும் திரைப்படங்களிலும், வானொலி, தொலைக் காட்சிகளிலும் பாடப்படுகின்றன. பாரதியின் ஜன்மதின நூற்றாண்டு விழாவின் போது 1982-ம் ஆண்டில் பாரதி பற்றி, அவருடைய பாடல்களும், கவிதைகளும், கட்டுரைகளும், கருத்துக்களும் சற்று விரிவாகவே தமிழ் கூறும் நல்லுலகத்திற்குச் சென்றது. பாரதி பற்றிப் பலரும் பல செய்திகளையும் கட்டுரைகளையும் பத்திரிகைகளில் எழுதினார்கள். பாரதி பற்றி பல கோணங்களில் பலநூல்களும் வெளிவந்தன. இன்னும் அவருடைய படைப்புகளில் அவருடைய சுயசரிதைப் பாடல் அதில் ஆங்கிலக்கல்விப் பற்றி அவர் எழுதியுள்ள பகுதி, கண்ணன் பாட்டு, பாஞ்சாலி சபதம், முதலிய பகுதிகள் எல்லாம் ஏன் பாடத்திட்டங்களில் சேர்க்கப்பட்டு பாடநூல்களில் கொண்டு