பக்கம்:தமிழ்மொழி வளர்ச்சியில் பாரதியின் உரைநடை.pdf/102

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தமிழ்மொழி-வளர்ச்சியில்-பாதியின்-உரைநடை-அ-சீனிவாசன் 97 15. பெண் விடுதலை பற்றி பெண் விடுதலை, மத பேதங்களை நீக்குதல் ஆகியவை பற்றி தமிழ் நாட்டில் ஒரு புதிய விழிப்புணர்வு ஏற்பட்டுள்ளது பற்றியும் தமிழகம் முன்பே வழி காட்டி வந்துள்ளது பற்றியும் பாரதியார் தமது கட்டுரை ஒன்றில் எடுத்துக் கூறுகிறார். அதுவும் அவருடைய சிறந்த உரைநடைத் தமிழுக்கு எடுத்துக்காட்டாகும். அது வருமாறு “இன்று தமிழ் நாட்டில் மாத்திரமேயல்லாது பூமண்டலம் முழுவதிலும் பெண் தாழ்வாகவும், ஆண் மேலாகவும் கருதி நடத்தும் முறைமை ஏற்பட்டிருப்பது முற்றிலும் தவறு அது துன்பங்களுக்கெல்லாம் அஸ்திவாரம். அந்திகளுக்கெல்லாம் கோட்டை. கலியுகத்திற்குப் பிறப்பிடம். இந்த விஷயம் தமிழ் நாட்டில் பல புத்திமான்களின் மனதிலே பட்டு பெண் விடுதலைக் கட்சி தமிழ் நாட்டின் கண்ணே பல மடைந்து வருவதை நோக்குமிடத்தே எனக்கு அளவில்லாத மகிழ்ச்சியுண்டாகிறது. இந்த விஷயத்தில் தமிழ்நாடு பூமண்டலத்துக்குச் சிறந்த வழிகாட்டியாக விளங்கும் என்பதில் ஆக்ஷேபமில்லை” என்று குறிப்பிடுகிறார். தமிழ்நாட்டில் பெண் விடுதலை இயக்கத்திற்கு பாரதியாரின் கவிதைகளும் கட்டுரைகளும் ஒரு விடிவெள்ளியாகும். ஆணும், பெண்ணும் அனைத்திலும் சமம் என்பது மட்டுமல்ல, பெண்மையை மேன்மைப்படுத்தியே பாரதி பேசுகிறார். அவருடைய பாடல்கள் முழுவதும் சக்திமயமானது. அவர் தமிழில் எழுதிய காவியமும் பாஞ்சாலி சபதமாகும். பாரதியாரின் கவிதைப் பகுதியில் பெண் விடுதலை பற்றியது தனிப் பகுதியாகும். உரைடைப் பகுதியிலும் பெண் உரிமை, பெண் விடுதலை பற்றி அவர் கூறியிருப்பது நடையும் கருத்தும் சிறப்புமிக்கது. i