பக்கம்:தமிழ்மொழி வளர்ச்சியில் பாரதியின் உரைநடை.pdf/105

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

17. கதை வடிவம் 17. கதை வடிவம் பாரதியாரின் உரைநடையில் கதையும் ஒரு வடிவமாகும். கதை என்பது பெரும்பாலும் கற்பனைக் கதையேயாகும். பாரதியார் ரயில்வே ஸ்தானம் என்னும் தலைப்பில் ஒரு சிறிய கதை எழுதியுள்ளார். அதன் தொடக்கமாக அவர் எழுதியுள்ள கதை வரிகள், அவருடைய உரைநடைக்கு மற்றொரு சிறந்த எடுத்துக் காட்டாகும். அவருடைய ரயில்வே ஸ்தானத்தின் வர்ணனை மிகவும் அற்புதமாகவும் கருத்துச் செரிவுடனும், கிண்டலும், நகைச்சுவையும் கொண்டதாகவும் அமைந்திருக்கிறது. பாரதியாரின் உரைநடை அவருடைய கவிதைகளைப் போலவே எந்தக் கருத்திலும் தாக்குதல் தன்மையே அதிகரித்துக் காணப்படுகிறது. நல்லனவற்றைப் பாராட்டியும், அல்லனவற்றைத் தாக்கியும் அவருடைய கருத்துக்கள் கூர்மையாகவே அமைந்துள்ளன. அவருடைய வார்த்தைகள் சுரீர் என்று அம்புபோல் வேகமாகச் செல்கின்றன. வைத்த குறி தவறு -வதில்லை. கருத்துக்கள் துல்லியமாகவும் தெளிவாகவும் அமைந்துள்ளன. தமிழுக்கு சரளமான உரைநடை புதிது என்றாலும், அது பாரதியின் வரிகளில் மெருகுடன் மிளிர்கிறது. ஒரு புதிய அடிப்படையை, வழிமுறையை வகுத்து விட்டிருக்கிறது. உள்ளத்தில் உண்மை ஒளி உண்டாயின் வாக்கினிலே ஒளியுண்டாகும் என்னும் பாரதியின் வாக்கு சத்திய வாக்காகும். இப்போது அவருடைய கதையில் உள்ள உரைநடையைக் காண்போம். "வஸந்த காலம். காலை நேரம் தென்காசி ஸ்டேஷன். இது பிரிட்டிஷ் இந்தியாவைச் சேர்ந்தது. இதற்கு மேற்கேயுள்ள அடுத்த ஸ்டேஷன் செங்கோட்டை. இது திருவாங்கூர் சமஸ்தானத்தைச் சேர்ந்தது. தெற்கே இரண்டு மைல் தூரத்தில் கீர்த்தி பெற்ற