பக்கம்:தமிழ்மொழி வளர்ச்சியில் பாரதியின் உரைநடை.pdf/106

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தமிழ்மொழி-வளர்ச்சியில்-பாதியின்-உரைநடை-அ-சீனிவாசன் ዝ01 குற்றாலத்தருவி விழுகிறது. பக்கமெல்லாம் மலையகிரிச்சாரல் கொஞ்சம் மேற்கே போனால் செங்கோட்டை ஸ்டேஷன் முதல் திருவனந்தபுரம் வரை பாதையிலே பத்து ஸ்டேஷன் மட்டும். இரண்டு பக்கங்களிலும் செங்குத்தான மலைகளும் ஆழமான பள்ளங்களும், மலையை உடைத்து ரயில் வண்டி ஊடுருவி செல்லும் பொருட்டாக ஏற்படுத்தப் பட்ட நீண்ட மலைப்புழைகளும் இரு பாரிசத்திலும் இயற்கையாய்ப் பச்சை உடுத்தி சால மிகப் பெருஞ் செழிப்புடனே களி கொண்டு நிற்கும் பல வகைப்பட்ட வணக்காட்சிகளும் ஒரு முறை பார்த்தால் பிறகு எக்காலத்திலும் மறக்க முடியாதன. இந்தத் தென்காசி ஸ்டெஷன் வெளிப்புறத்தில் காலை நேரத்திலே திருநெல்வேலிப்பக்கம் கிழக்கே போகும் ரயில் வரப்போகிற சமயத்தில் சுமார் நூறு பிரயாணிகள் வந்து கூடியிருந்தார்கள். “இவர்களிலே சிலர் பிராமண வைதீகர் நீர்க்காவி அழுக்கு நிறமாக ஏறிப்போன மிகப் பழைய வெள்ளைத்துணி உடுத்தி உடல் வேர்க்க உட்கார்ந்து கொண்டு இன்ன ஊரில் இன்ன தேதி இன்னாருக்கு சீமந்தம் என்ற விஷயங்களைப் பற்றிச் சம்பாஷணை செய்து கொண்டிருக்கிறார்கள். “பிராமண விதவைகள் சிலர் ஒரு புறத்திலே இருந்து தமக்குள் ஏதோ பேசிக் கொண்டிருக்கிறார்கள். சுமங்கலிப் பிராமணத்திகள் ஒரு பக்கத்தில் தலை குனிந்து நின்று கொண்டு போவோர் வருவோரைக் கடைக் கண்ணால் பார்த்துக் கொண்டிருக்கிறார்கள். வேறு சில உத்தியோகஸ்தர், தலைப்பாகை கோட்டு, கெடிகாரச் சங்கிலி சகிதமாக உலாவுகிறார்கள். சில போலீஸ்காரர்கள் சக்கர வர்த்திகளைப் போல தலை நிமிர்ந்து