பக்கம்:தமிழ்மொழி வளர்ச்சியில் பாரதியின் உரைநடை.pdf/108

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தமிழ்மொழி-வளர்ச்சியில்-பாதியின்-உரைநடை-அ-சீனிவாசன் 103 18. தேசியக் கல்வி பற்றி தமிழ் நாட்டில் தேசியக் கல்வி என்பதான ஒன்று தொடங்கி அதில் தமிழ் பாஷையைப் பிரதானமாக நாட்டாமல் பெரும்பான்மைக் கல்வி இங்கிலிஷ் மூலமாகவும் தமிழ் ஒருவித உப பாஷையாகவும் ஏற்படுத்தினால் அது "தேசியம்”என்ற பதத்தின் பொருளுக்கு முழுதும் விரோதமாக முடியும் என்பதில் ஐயமில்லை. தேச பாஷையே பிரதானம் என்பது தேசியக் கல்வியின் ஆதாரக் கொள்கை. இதை மறந்து விடக் கூடாது. தேச பாஷையை விருத்தி செய்யும் நோக்கத்துடன் தொடங்கப்படுகிற இந்த முயற்சிக்கு நாம் தமிழ் நாட்டிலிருந்து பரிபூரண சகாயத்தை எதிர்பார்க்க வேண்டுமானால் இந்த முயற்சிக்குத் தமிழ் பாஷையே முதற் கருவியாக ஏற்படுத்தப்படும் என்பதை தம்பட்டம் செய்து அறிவிக்க வேண்டும். இங்ங்ணம் தமிழ் பிரதானம் என்று நான் சொல்லுவதால் டாக்டர் நாயரைத் தலைமையாகக் கொண்ட திராவிடக் கrயார் என்ற போலிப் பெயர் புனைந்த தேச விரோதிகளுக்கு நான் சார்பாகி, ஆர்ய பாஷா விரோதம் பூண்டு பேசுகிறேன் என்று நினைத்து விடலாகாது. தமிழ் நாட்டிலே தமிழ் சிறந்திடுக. பாரத தேசம் முழுதிலும் எப்போதும் போலவே வடமொழி வாழ்க. இன்னும் நாம் பாரத தேசத்தின் ஐக்கியத்தைப் பரிபூரணமாகச் செய்யுமாறு நாடு முழுவதிலும் வட மொழிப் பயிற்சி மேன்மேலும் ஓங்குக. எனினும் தமிழ் நாட்டில் தமிழ் மொழி தலைமை பெற்றுத் தழைத்திடுக” என்று பாரதி எழுதியிருக்கிறார். ‘வாழிய செந்தமிழ் வாழ்க நற்றமிழர் வாழிய பாரத மனித்திரு நாடு” என்பது பாரதியின் உறுதிப் பாடான கொள்கையாகும். வேத கால சரித்திரம், புராண கால சரித்திரங்கள், பெளத்த கால சரித்திரம், ராஜ புதானத்தின் சரித்திரம் இவை மிகவும்