பக்கம்:தமிழ்மொழி வளர்ச்சியில் பாரதியின் உரைநடை.pdf/109

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

18. தேசியக் கவிப் பற்றி 104 சிரத்தையுடன் கற்பிக்க வேண்டும். பள்ளிக் கூடம் ஏற்படுத்தப் போகிற கிராமம் அல்லது பட்டணம் எந்த மகாணத்தில் அல்லது எந்த ராஷ்டிரத்தில் இருக்கிறதோ அந்த மகாணத்தின் சரித்திரம் விசேஷமாகப் பயிற்றுவிக்கப் பட வேண்டும். இங்கு நான் மாகாணம் அல்லது ராஷ்டிரம் என வகுத்திருப்பது சென்னை மாகாணம் அல்லது பம்பாய் மாகாணம் முதலிய தற்காலப் பகுதிகளைக் குறிப்பதன்று. பாஷைப் பிரிவுகளுக்கு இசைந்தவாறு வகுக்கப்படும் தமிழ்நாடு, தெலுங்குநாடு, மலையாளநாடு முதலிய இயற்கைப் பகுதிகளைக் குறிப்பது). இந்த சரித்திரங்களில் மஹா கீர்த்தி பெற்று விளங்கும் பருவங்களை உபாத்தியாயர்கள் மிகவும் உற்சாகத்துடனும், ஆவேசத்துடனும், பக்தி சிரத்தையுடனும் கற்பிக்கும் படி ஏற்பாடு செய்ய வேண்டும். அதி பால்ய பிராயத்தில் மனதில் பதிக்கப்படும் சித்திரங்களே எக்காலமும் நீடித்து நிற்கும் இயல்புடையன. ஆதலால் பள்ளிப் பிள்ளைகளுக்கு ஆரம்ப வகுப்பிலேயே நம்முடைய புராதன சரித்திரத்தின் அற்புதமான பகுதிகளை யூட்டி, அசோகன், விக்கிரமாதித்தன், ராமன், லக்ஷ்மணன், தர்மபுத்திரன், அர்ஜுனன் இவர்களிடமிருந்த சிறந்த குணங்களையும் அவற்றால் அவர்களுக்கும் அவர்களுடைய குடிகளுக்கும் ஏற்பட்ட மஹிமைகளையும் பிள்ளைகளின் மனதில் பதியும் படி செய்வது அந்த பிள்ளைகளின் இயல்பைச் சீர்திருத்தி மேன்மைப் படுத்துவதற்கு நல்ல சாதனமாகும். தேச பாஷையின் மூலமாகவே இந்தச் சரித்திரப் படிப்பு மட்டுமேயன்றி மற்றெல்லாப் பாடங்களும் கற்பிக்கப் பட வேண்டுமென்பது சொல்லாமலே விளங்கும். தேச பாஷையின் மூலமாகப் பயிற்றப் படாத கல்விக்கு தேசியக் கல்வி என்ற பெயர் சொல்லுதல் சிறிதளவும் பொருந்தாது போய்விடுமன்றோ?' என்று பாரதி கூறுகிறார். ==