பக்கம்:தமிழ்மொழி வளர்ச்சியில் பாரதியின் உரைநடை.pdf/11

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

1. தோற்றுவாய் 6 வரப்படவில்லை? இதைக் காட்டிலும் வேறு கொடுமை எதுவும் இருக்க முடியாது. பாரதியின் இந்தப் பாடல்கள் எல்லாம், பாடல் தொகுப்புகள் எல்லாம், இன்னும், விநாயகர் நான் மணிமாலை, பாட்டு முதலியவைகள் எல்லாம் இன்னும் அதிகமாக மக்களிடம் செல்ல வேண்டும். பள்ளிகளில், கல்லூரிகளில் பாடத்திட்டங்களில் சேர்க்கப்பட வேண்டும். பாரதியின் பகவத் கீதை தமிழாக்கம், அந்தத் தமி ழாக்கத்திற்கு அவர் எழுதியுள்ள முன்னுரை ஆகியவை மிகவும் அற்புதமான படைப்புகளாகும். இவையெல்லாம் மக்களிடம் மிக விரிவாகச் செல்ல வேண்டும். பள்ளிகளில், கல்லூரிகளில் பாடமாகச் செல்ல வேண்டும். பல்கலைக் கழகங்களில் பாரதிக்கு என்று தனித்துறைகள் அமைத்து அவருடைய கருத்துகள் ஆராய்ச்சி செய்யப்பட வேண்டும். “குணத்துக்கும் செய்கைக்கும் தக்கபடி நான் நான்கு வர்ணங்களை சமைத்தேன்” என்று கீதை கூறுகிறது. இதிலிருந்து வர்ணங்கள் என்பது பிறப்பினால் அல்ல என்பது தெளிவு. பாரதி தன்னுடைய கண்ணன் பாட்டில் கண்ணன்-என் தந்தை என்னும் தலைப்பில் 8-வது பாடலில் : 'நாலுகுலங்கள் அமைத்தான் - அதை நாசமுறப்புரிந்தனர் மூடமனிதர் சிலம், அறிவு, தர்மம் - இவை சிறந்தவர் குலத்தினில் சிறந்தவராம்