பக்கம்:தமிழ்மொழி வளர்ச்சியில் பாரதியின் உரைநடை.pdf/110

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தமிழ்மொழி வளர்ச்சியில் பாரதியின்-உரைநடை-அ-சீனிவாசன் 105 "தமிழ் நாட்டில் தேசியக் கல்வி கற்பிக்க வேண்டுமானால் அதற்குத் தமிழே தனிக் கருவியாக ஏற்படுத்த வேண்டு -மென்பதைச் சொல்லவும் வேண்டுமா?” என்பதைப் பாரதி மிகவும் தெளிவாகவே குறிப்பிடுகிறார். "தமிழ் நாட்டு ஸ்திரீகளையும் சேர்த்துக் கொண்டு அவர்களுடைய யோசனைகளைத் தழுவி நடத்தாவிடின் அக்கல்வி சுதேசியம் ஆக மாட்டாது. தமிழ்க் கல்விக்கும் தமிழ்க் கலைகளுக்கும் தொழில்களுக்கும் தமிழ் ஸ்திரீகளே விளக்குகளாவர். தமிழ்க் கோவில், தமிழரசு, தமிழ்க் கவிதை, தமிழ்த் தொழில் முதலியவற்றுக்கெல்லாம் துணையாகவும் தூண்டுதலாகவும் நிற்பது தமிழ் மாதரன்றோ” என்று சதேசிக் கல்வியைப் பரப்புவதில் மாதர்களின் பங்கு பற்றி பாரதி மிகவும் சிறப்பாகவே குறிப்பிடுகிறார். பாரதியாருடைய உரைநடை அவர் கையாளும் பொருளுக்கேற்றவாறும் கூட சில சமயம் அமைந்திருப்பதைக் காண முடிகிறது. எடுத்துக் காட்டாகக் கீழ்க்கண்ட பகுதியைக் குறிப்பிடலாம். “அநாவசியமான தண்டத்திற்கெல்லாம் தமிழர் பணத்தை வாரி இறைக்கிறார்கள். “கான்பரன்ஸ்”என்றும்"மீட்டிங்”என்றும் கூட்டங்கள் கூடி விடிய விடிய வார்த்தைகள் சொல்லுகிறார்கள். கிராமங்கள் தோறும் தமிழ்ப் பள்ளிக் கூடங்கள் போடுவதற்கு யாதொரு வழியும் செய்யாமல் இருக்கிறார்களே! படிப்பு இல்லாத ஜனங்கள் மிருகங்களுக்கு சமானமென்று திருவள்ளுவர் பச்சைத் தமிழிலே சொல்லுகிறார். நமக்குள் எத்தனையோ புத்திமான்கள் இருந்தும் நம்மில் முக்கால் பங்குக்கு மேலே மிருகங்களாக இருக்கும் அவமானத்தைத் தீர்க்க ஒரு வழி பிறக்கவில்லையே? ஏன்? எதனாலே? காரணந்தான்.என்ன? என்று குறிப்பிடுகிறார்.