பக்கம்:தமிழ்மொழி வளர்ச்சியில் பாரதியின் உரைநடை.pdf/113

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

19.-பாதி-தன்னுடைய கவிதைகளுக்கு-எழுதியுள்ள சில முன்னுரைகள் 10B “இந்த உலகமே பொய்” என்று நமது தேசத்தில் ஒரு சாஸ்திரம் வழங்கி வருகிறது. ஸந்நியாசிகள் இதை ஓயாமல் சொல்லிக் கொண்டிருக்கட்டும். இதைப்பற்றி இந்த நிமிஷம் எனக்கு வருத்த மில்லை. குடும்பத்தில் இருப்போருக்கு இந்த வார்த்தை பொருந்துமா? நடுவிட்டில் உச்சரிக்கலாமா? அவச்சொல்லன்றோ? நமக்குத் தந்தை வைத்து விட்டுப்போன விடும் வயலும் பொய்யா? தங்கச் சிலைபோல் நிற்கிறாள் மனைவி. நமது துயரத்திற்கெல்லாம் கண்ணிர் விட்டுக் கரைந்தாள். நமது மகிழ்ச்சியின் போதெல்லாம் உடல் பூரித்தாள். நமது குழந்தைகளை வளர்த்தாள். அவள் பொய்யா? குழந்தைகளும் பொய்தானா? பெற்றவரிடம் கேட்கிறேன். குழந்தைகள் பொய்யா? நமது விட்டில் வைத்துக் கும்பிடும் குல தெய்வம் பொய்யா? விடுகட்டிக் குடித்தனம் பண்ணுவோருக்கு மேற்படி சாஸ்திரம் பயன்படாது. நமக்கு இவ்வுலகில் வேண்டியது நீண்ட வயது, நோயில்லாமை, அறிவு, செல்வம் என்ற நான்கும் இவற்றைத் தரும்படி தத்தம் குல தெய்வங்களை மன்றாடிக் கேட்க வேண்டும். எல்லா தெய்வங்களும் ஒன்று. அறம் பொருள் இன்பம் என்ற மூன்றிலும் தெய்வ ஒளி காண வேண்டும். தெய்வத்தின் ஒளியைக் கண்டால் நான்காம் நிலையாகிய வீடு தானே கிடைக்கும்” என்று பாரதியார் தனது வலுவான தத்துவ ஞானக் கருத்தை இவ்வுரைநடை வாசகங்கள் மூலம் வெளிப் படுத்தியுள்ளார். “ஸ்வதேச கீதங்கள்” என்னும் நூலிலுள்ள சமர்ப்பணமும் முகவுரையும் --- இனிய நிலவின் ஒளியால் விழுங்கப்பட்டு உலகம் அவாங்க மன கோசரமாகிய ஸ்ெளந்தர்யத்தைப் பெற்றிருக்கும் சமயத்தில் ஒவ்வொரு கவிஞனுடைய உள்ளமும் தன்னையறியாத