பக்கம்:தமிழ்மொழி வளர்ச்சியில் பாரதியின் உரைநடை.pdf/115

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

19. பாரதி தன்னுடைய கவிதைகளுக்கு எழுதியுள்ள சில முன்னுரைகள் مسیر U 110 நிலையிலும் நிதானக்கட்சியார் என்றும் :: என்றும் பிளவு ஏற்பட்டது. நிதானக் கட்சியாருக்குர் (மிதவாதப்பிரிவு) பெரோஷ் ஷா மேத்தா, கோபாலகிருஷ்ண கோகலே முதலியோர் தலைமையாக இருந்தார்கள். தமிழகத்தில் வ.உ.சிதம்பரம் பிள்ளை, சுப்ரமணிய சிவா, பாரதியார் ஆகியோர் தீவிரவாதப் பிரிவுக்கும் திலகர் தலைமைக்கும் ஆதரவு கொடுத்து வந்தார்கள். பாரதி திலகரை ஆதரித்து, மேத்தா திலகருக்கு புத்தி சொல்வதாகவும், கற்பித்துப் பாடல்கள் பாடியுள்ளார். அப்பாடல்களில் நந்தனார் சிதம்பரம் செல்வதற்குப் பிடிவாதமாக இருந்ததாகவும், சேரியிலிருந்த நிதானக் கூட்டத்தார், நந்தனார் செயலை ஆட்சேபித்ததாகவும் கற்பித்து அதை ஒப்பிட்டுப் பாடியுள்ள பாடல்களுக்கு பாரதி விளக்கவுரையாக ஒரு சிறிய முன்னுரை எழுதியுள்ளார். அவை வருமாறு: “மேத்தா திலகருக்குச் சொல்வதாக,” ஒய்! திலகரே நம்ம ஜாதிக்கடுக்குமோ? செய்வது சரியோ? சொல்லும் என்னும் தொடர் பாடலுக்கு முன்னுரையாக: “சிதம்பரப் பதவியாகிய முக்தியிலே நந்தனார் அடங்காத தாகம் கொண்டிருந்தார். அது அவரை அடிமை கொண்டிருந்த ஆண்டைக்கு மனமில்லை. அவர் நந்தனாரைப் பலவித இம்சைகளுக்கு உட்படுத்தினார். அதுவுமின்றிச் சேரியிலிருந்த நிதானப் பறையர்கள் பலர் நந்தனார் சிதம்பரத்தைப் பற்றி நினைக்கலாகாதென்றும், போதனை செய்தார்கள். அந்த நிதானஸ்தர்களிலே ஒருவர் பாடிய பாட்டின் கருத்தையுடைய வர்ண மெட்டையும் தழுவிப் பின்வரும் பாடல் செய்யப் பட்டிருக்கிறது” என்று பாரதி குறிப்பிட்டுள்ளார். 'நிதானக் கட்சியார் கூட்டம்” என்னும் தலைப்பிலான பாடலுக்கு முன்னுரையாக பாரதி எழுதியுள்ளது :