பக்கம்:தமிழ்மொழி வளர்ச்சியில் பாரதியின் உரைநடை.pdf/118

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தமிழ்மொழி-வளர்ச்சியில்-பாதியின்-உரைநடை-அ-சீனிவாசன் 113 திருஷ்டாந்தங்களில் எனது சொந்த சரக்கு அதிகமில்லை. தமிழ் நடைக்கு மாத்திரமே நான் பொறுப்பாளி. தமிழ் ஜாதிக்கு புதிய வாழ்வு தர வேண்டும் என்று கங்கணம் கட்டி நிற்கும் பராசக்தியே என்னை இத்தொழிலிலே தூண்டினாளாதலின் இதன் நடை நம்மவர்க்குப் பிரியந்தருவதாகும் என்றே நம்புகிறேன். ஒம், வந்தே மாதரம்” என்று பாரதியார் எழுதி முடிந்துள்ளார். பாரதியாரின் கவிதைகளில் மிகவும் முக்கியமான ஒரு பகுதி "பாஞ்சாலி சபதம்’ என்னும் சிறு காவியமாகும். இது அளவில் தான் பாடல் எண்ணிக்கையில் தான் சிறுகாவியம். இந்தக் காவியம் மகாபாரதக் கதையில் வரும் உள்ளத்தை உருக்கும் ஒரு நிகழ்ச்சியாகும். மகாபாரதப் பெருங்கதை பாரத மக்கள் அனைவரின் உள்ளங்களிலும் ஆழப் பதிந்துள்ள ஒரு பெருங் கதையாகும். மகாபாரதமும், இராமாயணமும் எத்தனை தடவை படித்தாலும் எத்தனை தடவை கேட்டாலும் நமது நாட்டு மக்களுக்கு அலுப்புத் தட்டுவதில்லை. இவ்விரு இதிகாசங்களும் பாரத நாட்டு மக்களின் பண்பாட்டையும், சிந்தனைப் போக்குகளையும், பாரம்பரியங்களையும் உருவாக்கி அவைகளுக்கு ஒரு அடிப் படையையும் உருவாக்கியிருக்கிறது. பாரதியார் "பாஞ்சாலி சபதம்’ என்னும் நிகழ்ச்சியை தனது காவியத்திற்குக் கருவாக எடுத்துக் கொண்டிருக்கிறார். அதற்கு ஒரு முக்கியமான காரணம் உண்டு என்பதை அறிவோம். பாஞ்சாலியின் சபதம் பாரதப் போரிலும் போர்க்களத்திலும் நிறைவேற்றப் படுகிறது. சீதா பிராட்டியின் துயரம் இலங்கைப் போர் மூலம் தீர்க்கப்படுகிறது. பாரத நாட்டின் விடுதலைக்கான சூளுரை அதன் விடுதலை வேள்வியிலும், போராட்டக் களத்திலும்