பக்கம்:தமிழ்மொழி வளர்ச்சியில் பாரதியின் உரைநடை.pdf/12

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தமிழ்மொழி-வளர்ச்சியில்-பாதியின்-உரைநடை-ஆ சீனிவாசன் மேலவர் கிழவர் என்றே - வெறும் வேடத்தில் பிறப்பினில் விதிப்பனவாம் போலிச் சுவடியையெல்லம் - இன்று பொசுக்கிவிட்டால் எவர்க்கும் நன்மையுண்டென்போம்” என்று பாரதி குறிப்பிடுகிறார். “பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் சிறப்பொவ்வா செய்தொழில் வேற்றுமையான்” என்று வள்ளுவப் பேராசான் கூறுகிறார். 'எனவே கண்ணபிரான் மனிதருக்குள் ஜாதி வேற்றுமையும் அறிவு வேற்றுமையும் பார்க்கக் கூடாதென்பது மட்டுமேயன்றி எல்லா உயிர்களுக்குள்ளேயும் எவ்வித வேற்றுமையும் பாராதிருத்தலே ஞானிகளுக்கு லக்ஷணமென்று சொல்லுகிறார்” என்று பாரதியார் தன்னுடைய பகவத்கீதை தமிழாக்க நூலுக்கு எழுதியுள்ள முன்னுரை 3-ம் பகுதியில் குறிப்பிடுகிறார். உண்மை விவரம் இவ்வாறு இருக்க ஏன் சில மூடமனிதர், அறிவுக்குருடர் கீதையையும் பாரதியையும் அவதூறு செய்து பேசுகிறார்கள்? கண்ண பரமாத்மா அவர்களுக்கு நல்ல புத்தியைக் கொடுக்கட்டும். எனவே பாரதி, அவருடைய நூல்கள், அதன் கருத்துகள், ஆகியவற்றை விரிவாக மக்களிடம் கொண்டு செல்ல வேண்டும். அப்போது நல்லோர்களும் மேலும் நல்ல அறிவைப் பெறுவார்கள். சில மூடங்களும் அறிவு பெற்றுத் தெளிவடைவார்கள். எல்லாவற்றிற்கும் மேலாக பாரதியின் உரைநடைப் பகுதிகள் அவருடைய கவிதைகள் மக்களிடம் சென்றுள்ள அளவில் கூட