பக்கம்:தமிழ்மொழி வளர்ச்சியில் பாரதியின் உரைநடை.pdf/120

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தமிழ்மொழி-வளர்ச்சியில் பாதியின்-உரைநடை-அ-சீனிவாசன் 115 கலியும் வந்திருக்க மாட்டாது. ஒரு தேசத்திற்கு ஏற்படும் உயர்வு தாழ்வுகளுக்கு அத்தேசத்திலுள்ள பிராமணர்களே பொருப் -பாளிகளென மேலே குறித்திருப்பதை விளக்கும் பொருட்டு மஹாபாரதப் போர் நடக்கு முன்பாகவே முதற்படப்பாவம் பிராமணர்களுக்குள் புகுந்ததென்பதை நூல் தெரிவிக்கிறது” என்று பாரதி எடுத்துக் கூறுகிறார். பாஞ்சாலி சபதத்தின் 69,70-ம் டாட்டுகளின் கருத்தாகக் கீழ்க் கண்டவாறு பாரதி விளக்கம் கூறுகிறார். ‘சகுனி சொல்கிறான், நமக்கு ஏற்கனவே அளவிறந்த செல்வம் இருக்கும் போது இன்னும் அதிக செல்வத்தை ஏன் விரும்ப வேண்டும்? இருப்பதை வைத்துப் பாதுகாத்தால் போதாதா? என்று ஒரு வேளை நீ நினைக்கிறாய் போலும். ஆனால் இவ்வித நினைப்பு நின் போன்ற ஆரிய மன்னர்களுக்குத் தகாது. ஏனென்றால் நித்தம் ஏராளமான செல்வத்தைத் தானம் லியவற்றால் ஒரு பக்கத்திலே ெ பிட்டு மற்றொரு பக்கத்திே போர் முதலியவற்றால் மிக்க பொருள் சேகரித்துக் கொண்டிருப்பதாகிய இரட்டைத் தொழில் ஆரிய மன்னர்களால் அனுசரிக்கப் படுவது. இருப்பதை மூடிமறைக்க விரும்புவோன் அரசனல்லன். கிழச்செட்டி எது போலெனில் கங்கை நதி நாள்தோறும் அளவில்லாத ஜலத்தைக் கடலிலே கொண்டு போய்க் கொட்டுகிறது. என்ன விண் செலவு. இந்த வீண் செலவு செய்யாவிட்டால் ஜீவனின்றி அழுகிப் போய்விடும். மலை மீதிருந்து அதற்கு ஓயாத ஊற்று வரவு இருக்கிறது. அதனை உலகுக்கெல்லாம் வழங்குவது இன்றிக் கடலிலும் கொண்டு பொழிகிறது. ஆம்'மேலே செல்வரிடமுள்ள பொருளைக் கவர்ந்து 'கீழே ஸாமானிய ஜனங்களுக்குப் பல வழிகளிலே பயன் படுத்த வேண்டும். அப்போதுதான் ராஜா, கங்கை நதியைப் போல ஜீவ