பக்கம்:தமிழ்மொழி வளர்ச்சியில் பாரதியின் உரைநடை.pdf/123

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

19. பாரதி தன்னுடைய கவிதைகளுக்கு எழுதியுள்ள சில முன்னுரைகள் 118 “நமது நாட்டில் வேத காலத்து ரிஷிகள் பிரிகிருதியின் ஸ்ெளந்திர்யங்களைக்கண்டு மோஹித்துப் பரமானந்தம் எய்தியவர்களாய் பல அதிசயமான பாடல்கள் பாடியிருக்கிறார்கள். பிரகிருதியின் அழகை கண்டு பரவச மெய்திக் காளிதாசன் முதலிய பெருங்கவிகள் அற்புதக் கவிதைகள் செய்திருக்கின்றனர். இக்காலத்தில்தான் இந்தத் துரதிருஷ்ட நிலை கொண்ட நாட்டில் வானம் பார்த்தறியாத குருடர்களெல்லாம் கவிகள் என்று சொல்லி வெளி வருகிறார்கள். ஸஅர்யாஸ்தமனத்தின் அற்புத ஸெளந்திர்யங்களை எழுதிப் பிறர் மனதில் படும்படி செய்வது சாத்தியமில்லை. நேரிலே கொண்டு காட்டினாலும் பலருக்கு ஆரம்பத்திலே கண் கூசுவதுதான் அர்த்தமாகுமேயல்லாமல் விஷயம் தெரியாது. ஸ்ஹோதரா நீயாகவே போய்ப் பல தினம் அடுத்தடுத்துப் பார்க்க வேண்டும். பிறகு தான் உனக்கு அந்த தெய்வக்காட்சி சிறிது சிறிதாக விளங்கும். ஸஅர்யோதயத்திலேயும், ஸஅர்யாஸ் -தமனத்திலும் வானத்தில் நடக்கும் இந்திர ஜாலக் காட்சியில் கூடிணம் தோறும் புதிய புதிய விநோதங்கள் மாத்திரமேயன்றி இன்னுமொரு விசேஷமுண்டு. நேற்றிருந்தது போல் நாளையிராது. தினந்தோறும் வெவ்வேறு வாய்ப்புகள், வியப்புகள், வெவ்வேறு உலகங்கள், வெவ்வேறு மஹிமைகள், வெவ்வேறு கனவுகள், வெவ்வேறு ஆனந்தங்கள், வெவ்வேறு அநிர்வசனியங்கள். சில தினங்களின் முன்பு ஒர் மாலைப் பொழுதில் நான் கண்ட அதிசயங்களை ஒருவாறு இங்கு குறிப்பிடுகிறேன், அடிவானத்தில் ஸஅரிய கோளம் தக தகவென்று சுழன்று கொண்டிருந்தது. இருபது கோடி மின்னல்களை எடுத்து ஒரு சக்கரமாக வார்த்துச் சுழற்றுவது போலிருந்தது. ஆரம்பத்திலேதான் கண் கூகம். சிறிது நேரம் உற்று நோக்கிக் கொண்டிருந்தால்,