பக்கம்:தமிழ்மொழி வளர்ச்சியில் பாரதியின் உரைநடை.pdf/124

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தமிழ்மொழி-வளர்ச்சியில் பாதியின்-உரைநடை-அ-சீனிவாசன் 119 பிறகு கண் கூச்சம் தீர்ந்து போய் விடும். இரண்டு வட்டத்தகடுகள் ஒன்றின் மேலொன்று சுழலும். கீழேயிருப்பது சுத்தமான மின்வட்டம். மேலே மரகத வட்டம். பச்சை வர்ணம் அற்புதமான பசுமை. 'பச்சைத் தகடு பின்புறத்திலிருக்கும் மின் தகட்டை முழுதும் மறைத்துக் கொண்டிருக்கும். ஆயினும் இடையிடையே பின்னுள்ள வட்டத்தின் வயிரக்கிரணங்கள் கண் மீது பாயும். “பார் ஸஇiயனைச் சுற்றி மேகங்களெல்லாம் தீப்பெட்டெரிவது போலத் தோன்றுகிறது. ஆஹா, என்ன வர்ணங்கள் எத்தனை வித வடிவங்கள் எத்தனை ஆயிரவிதமான கலப்புகள். அக்கினிக் குழம்பு தங்கம் காய்ச்சி விட்ட ஒடைகள். எரிகின்ற தங்கத் தீவுகள். 'நீல ஏரிகள். கரும் பூதங்கள், எத்தனை வகை நீலம், எத்தனை விதச் செம்மை, எத்தனை வகைப் பசுமை, எத்தனை வகைக் கருமை, நீல ஏரியின் மீது மிதக்கும் தங்கத் தோணிகள் எரிகின்ற தங்க ஜரிகைக்கரை போட்ட கரிய சிகரங்கள். தங்கத் திமிங்கிலங்கள் மிதக்கும் கருங்கடல். எங்கு பார்த்தாலும் ஒளித்திரள். வர்ணக் களஞ்சியம், போ போ என்னால் அதை வர்ணிக்க முடியாது”என்று பாரதியின் தமிழ் உள்ளம் பாரத உள்ளம், கவியுள்ளம், கலையுள்ளம், கவிதை உள்ளம், இலக்கிய உள்ளம், இயற்கை உள்ளம், இன்ப உள்ளம், மனித உள்ளம் தனது தமிழ் உரைநடை மொழியில் விவரித்துக் கூறுகிறது. காலைக் கதிரவனின் அழகிய தோற்றமும், மாலைக் கதிரவனின் பேரழகு மிக்க மறைவின் காட்சியும், கவிஞனைக் கவர்ந்திருக்கிறது. அந்தக் காட்சியை பாரதி வர்ணித்திருப்பது தனி அழகு. பாஞ்சாலி சபதம் பாட்டு 175, வரிகள் 6,7 பற்றிய விளக்கத்தில் பாரதி கீழ்க்கண்டவாறு குறிப்பிடுகிறார்.