பக்கம்:தமிழ்மொழி வளர்ச்சியில் பாரதியின் உரைநடை.pdf/126

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

gufiğQ\on!ğ susmf&#uîlās umırğSuîlàr --enmpses» – – ...»+ *ofisumersür 121 பாரதியின் தமிழ் உரைநடை பற்றிய இந்த எடுத்துக் காட்டுகளும் நாம் கவனத்தில் எடுத்துக் கொள்ள வேண்டியவைகளாகும். தனது உள்ளத்தில் எழும் கருத்துகளைச் சரளமாக உரைநடையிலும் எடுத்துக் கூறுவதில் பாரதி நமக்குச் சிறந்த வழி காட்டியாக உள்ளார். பாரதி காலத்தில் இருந்த பேச்சு மொழியை இந்த அவருடைய உரைநடை பிரதிபலிக்கிறது. மொழி நடையிலும், கருத்தமைவுகளிலும் பாரதியின் தெளிவான சிந்தனை இந்த உரைநடைப் பகுதியில் தென்படுகிறது. ஒவ்வொன்றும் அந்தந்த தலைப்பிற்கேற்ப தனித்தன்மையோடு கருத்துக்களுடன் அமைந்திருக்கின்றன. இந்தக் கருத்துகள் பாரதியின் கவியுள்ளத்திலிருந்தும், தேச பக்தியிலிருந்தும், தெய்வ பக்தியிலிருந்தும், அனுபவங்களிலிருந்தும் உணர்வு பூர்வமாகப் பாரதப் பண்பாட்டு தளத்திலிருந்து எழுந்தவைகளாக அமைந்துள்ளன. இந்த உரை நடைப் பகுதிகளும் அவைகளின் மொழி நடையும் சிறந்த கருத்துக்களும் மக்களிடம் விரிவாகச் செல்ல வேண்டும்.