பக்கம்:தமிழ்மொழி வளர்ச்சியில் பாரதியின் உரைநடை.pdf/127

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

20. பாரதியின் பகவத் கீதை выбіртвамъ 20. பாரதியின் பகவத் கீதை தமிழாக்கம் தமிழில், கம்பன், கவிச்சக்கரவர்த்தி கம்பன், திருவள்ளுவர், தெய்வப்புலவர் வள்ளுவப் பேராசான், இளங்கோவடிகள், பெரும்பபுலவர் இளங்கோவடிகளார், சுப்ரமணிய பாரதி மகாகவி பாரதியார் என்று புகழ் பெற்றவர்கள். இந்தப் பெரும் புலவர்கள் எல்லாம் உலகப் பெருங்கவிகளின் வரிசையில் உயர்ந்துள்ளவர்கள். இவர்களைக் கண்டு, இவர்களைக் கேட்டு தமிழர்கள் அனைவரும் பெருமைப்பட வேண்டும். இந்தியர்கள் அனைவரும் பெருமிதம் கொள்ள வேண்டும். இந்த மகாகவிகளின் படைப்புகள் எல்லாம் பாரத சம்பத்தாகும். பாரதத்தின் பெரும் செல்வங்களாகும். பாரதப் பாரம்பரியத்தின் வழியிலான பேரிதிகாசத்தைத் தமிழில் பெருங்காவியமாகப் படைத்த கம்பன், பாரதக் கலாச் சாரத்தின் சிந்தனை வழியில் எழுந்த புருஷார்த்தங்களை அறம் பொருள் இன்பத்தை உலகப் பொது மறையாக உருவாக்கித் தந்த வள்ளுவப் பேராசான், கோவலன் என்னும் சிறப்பு மிக்க கலாரசிகனையும் இசையிலும் நாட்டியத்திலும் ஆடல்களிலும் பாடல்களிலும் பண்ணிலும், கூத்திலும், நிகரற்ற கலையரசி மாதவியையும் மனிதப் பிறவி எடுத்து தெய்வ வடிவத்திற்கு உயர்ந்த வீரப்பெண்மணி, கற்பின் பெருவடிவம் கண்ணகியையும், இமயம் வரை சென்றுயர்ந்த மூவேந்தர்களையும் படைத்த பெரும் புலவன் சேரன் தம்பி சிலம்புச் செல்வன், இளங்கோவடிகள், பாரதத்தை வையத் தலைமை வென்றெடுக்க வழி காட்டிய மகாகவி பாரதி ஆகிய பெரும் செல்வங்களை பாரத நாட்டிற்கும் உலகிற்கும் அளித்து தமிழகம் பெருமை பெற்றிருக்கிறது. தமிழகம் தந்த தலை சிறந்த மகான்களின் வரிசையில் பாரதி பிறந்தான். அவன் ஒரு சித்தன். அவன் ஒரு மகாகவி. தேசியத்தையும், தெய்விகத்தையும் இணைத்துப் பாடிய பெருங்